ரெயில் “டிக்கெட் புக்” செய்ய இந்த “நம்பர்” மட்டும் போதும்… இன்டர்நெட் தேவையில்லை, அலையவும் வேண்டாம்..

First Published Dec 22, 2016, 7:21 AM IST
Highlights


ரெயில் “டிக்கெட் புக்” செய்ய இந்த “நம்பர்” மட்டும் போதும்…

இன்டர்நெட் தேவையில்லை, அலையவும் வேண்டாம்..

ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய இனி யாரும் இன்டர்நெட்டை தேடியோ, அல்லது ரெயில் நிலையத்துக்கோ அலைய வேண்டாம். 139 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

வங்கிக் கணக்குடன் செல்போன் எண்ணை இணைத்து இருந்தால், டிக்கெட் கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து கழித்துக்  கொள்ளப்படும்.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் சாதாரண செல்போன் வைத்து இருப்பவர்களும், பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற இருப்பவர்களுக்கும் இந்த திட்டத்தை ரெயில்துறை கொண்டுவந்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணி ஒருவர், எத்தனை பேர் பயணம்செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம், பயண தேதி, எந்த வகுப்பில் பயணிக்க போகிறோம், பெயர், ரெயில் எண் ஆகியவற்றை 139 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப  வேண்டும்.

அதன்பின், ரெயில்வே நிர்வாகத்திடம் இருந்து, கட்டணத்துக்கான பரிமாற்ற அடையாள எண் அனுப்பிவைக்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது என்று நமது எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் டிக்கெட் கட்டணத் தொகையும் அனுப்பி வைக்கப்படும்.

அதன்பின் பணப்பரிமாற்ற பாஸ்வேர்டு அனுப்பப்படும் அதை உறுதி செய்தால், கட்டணம் வங்கிக்கணக்கில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

ஆன்-லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசமாக ரூ.10 லட்சத்துக்கான விபத்துக்காப்பீடு வழங்கப்படும் என ரெயில்வே துறை முன்பே அறிவித்துள்ளது. அந்த திட்டம் இதற்கும் பொருந்தும்.

ஆனால், இந்த திட்டத்தில் டிக்கெட்முன்பதிவு செய்ய , ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் நாம் பதிவு செய்து, இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

tags
click me!