வீடியோ சர்ச்சைக்கு மத்தியில் தேவகவுடாவின் பேரன் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆபாச வீடியோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைக்கும் என்று முதல்வர் சித்தராமையா நேற்று தெரிவித்தார். மாநில மகளிர் ஆணையம், சித்தராமையா அரசு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ததை அடுத்து, எஸ்ஐடி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகத் தோன்றும் ஆபாச வீடியோ கிளிப்புகள் பரவி வருகின்றன என்று முதல்வர் கூறினார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் குமாரசாமி பேசியபோது, “ஹாசன் வீடியோக்கள், தேர்தலின் போதே வெளியாகின. தற்போது எஸ்.ஐ.டி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையின் முடிவில் உண்மைகள் வெளியே வரும். யார் தவறு செய்திருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையால் உண்மை என்ன என்பது தெரிய வந்ததும் என் கருத்துகளைத் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்ட நிலையில் வரும் பெண்களுக்கு நாங்கள் ஆதரவாகவும் கரிசனத்தையும்தான் காட்டி இருக்கிறோம்.
அத்தகைய பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத்தான் முயற்சித்திருக்கிறோம்” என்று கூறினார். பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராக இருந்தார். அங்கு ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜனதா தளம் (மதச்சார்பற்ற), அல்லது JD(S), கடந்த ஆண்டு செப்டம்பரில் NDA வில் இணைந்தது. பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோ வெளியான நிலையில் பாஜக தரப்பு மௌனமாக இருக்கிறது.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?