Tirupati Laddu : திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்: ஆய்வு அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி!

By Velmurugan s  |  First Published Sep 19, 2024, 7:32 PM IST

Tirupati Laddu Animal Fat: திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்து இருப்பதாக வெளியாகி உள்ள ஆய்வு அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஆந்திரா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைய திருமலை விவகாரமும் ஒரு காரணமாக அமைந்தது. நாட்டின் பணக்கார கோவில்களில் ஒன்றாகக் கருதப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான மீது மக்கள் வைத்திருந்த பக்தியை ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் வியாபாரமாக மாற்றி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆந்திராவில் அமைச்சராக இருந்த ரோஜா திருப்பதி கோயில் பெயரில் முறைகேடு செய்து அதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. 

ஒய்.எஸ்.ஜெகன் ஆட்சியில் திருமலையில் எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறி சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி இருந்தார். அந்த வகையில் மிகவும் புனிதமான திருமலை லட்டுவில் இறைச்சி பொருள் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் கூறிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tap to resize

Latest Videos

undefined

திருப்பதிக்கு போக ரெடியா இருக்கீங்களா.? தேவஸ்தான வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இதனால் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ஜெகனுக்கு எதிராக திருமலை பக்தர்களும், இந்துத்துவா அமைப்பினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். மங்களகிரியில் உள்ள சிகே மாநாட்டில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், எம்எல்சிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு, கடந்த முறை ஆட்சியில் இருந்தவர்கள் புனித தலமான திருமலையை களங்கப்படுத்தியது மட்டுமின்றி பக்தர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாக அவர் குற்றம் சாட்டினார். மிகவும் புனிதமான திருமலை லட்டு தயாரிப்பில் இறைச்சி பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக சந்திரபாபு பரபரப்பு கருத்து தெரிவித்தார்.

தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆக இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

திருமலை லட்டு தயாரிப்பில் இயற்கையாகவே சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், முந்தைய அரசும், டிடிடியின் ஆட்சிக் குழுவும் லட்டுவின் தரத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை... அது தங்களின் சொந்தத் தொழில் என்பது போல் நடந்து கொண்டனர். இதன் காரணமாக, சுத்தமான நெய்க்கு பதிலாக, விலங்குகளின் கொழுப்பில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த லட்டுகள் பக்தர்களுக்கு விற்கப்பட்டதாக சந்திரபாபு தெரிவித்தார்.

ஒய்.எஸ்.பி ஆட்சியாளர்களால் திருமலை அசுத்தப்படுத்தப்பட்டு விட்டதாக சந்திரபாபு குற்றம் சாட்டினார். மேலும், திருப்பதி சந்நிதியில் இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது... திருமலையின் புனிதத்தை காப்போம், மாண்பை அதிகரிப்போம் என முதல்வர் சந்திரபாபு தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் திருப்பதி லட்டு கடந்த ஜூலை மாதம் ஆய்வுக்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதன் ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, அறிக்கையில் மாட்டின் கொழுப்பு, மீன் எண்ணெய், சோயா பீன் உள்ளிட்டவை கலக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் திருப்பதி தேவஸ்தான் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.

click me!