அனுராக் தாகூர் அதிரடி நீக்கம் : பிசிசிஐலிருந்து தூக்கி அடித்தது உச்சநீதிமன்றம்

First Published Jan 2, 2017, 12:22 PM IST
Highlights


பிசிசிஐ என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியத்தின் செயல்பாடுகளை வரையறுக்க நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. அக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்தது. கமிட்டியிம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்ம் என்று உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.

ஆனால் லோதா கமிட்டி பரிந்துரைகளை பிசிசி தலைவர் அனுராக் தாகூர் செயல்படுத்தவில்லை என புகார் எழுந்தது. ஏற்கனவே 3 முறை இது குறித்து உச்சநிதிமன்றம் எச்சரிக்கை விடுத்தும் பயன் இல்லாத நிலையில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்பல பிசிசிஐ தலைவர் அனுராக் தாகூர்,செயலாளர் அஜய் சிர்பே ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்றத்தில் பொய்யான தகவலை அளித்தது, ஐசிசி க்கு எழுதிய கடிதத்தை மறைத்தது போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டதக உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ யின் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு 2 ஆலோசகர்களையும் உச்சநீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டுள்ளது.

click me!