மோடி பேச்சு எதிரொலி: கடனுக்கான வட்டி குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி

First Published Jan 1, 2017, 8:47 PM IST
Highlights
மோடி பேச்சு எதிரொலி: கடனுக்கான வட்டி குறைத்தது பாரத ஸ்டேட் வங்கி

ஏழைகள், நடுத்த மக்களுக்கு கடன் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதற்கு இனங்க பாரத ஸ்டேட்ங் வங்கி புதிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 90 புள்ளிகள் குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதனால், அடுத்த வரும் நாட்களில் மற்ற வங்கிகளும் அடுத்தடுத்து வட்டி குறைப்பை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது-

எம்.எல்.சி.ஆர். எனச் சொல்லப்படும் இறுதிநிலைச் செலவு அடிப்படையிலான நிதிக்கடன் வட்டி 8.90 சதவிகிதத்தில் இருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

ரூபாய் நோட்டு தடையால் ஏற்பட்ட  பணத்தட்டுப்பாட்டை போக்க, ஒருமாதம், 3 மாதங்கள் மற்றும் 6 மாதங்களுக்கான வைப்புத்தொகைக்கான வட்டியும் 90 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்டேட் வங்கியைத் தொடர்ந்து யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் ஆகியவை வட்டியை 70 புள்ளிகள் குறைத்துள்ளன

 

click me!