தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் அவர் வசித்து வந்த அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்துவிட்டு வெளியேறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் அவர் வசித்து வந்த அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்துவிட்டு வெளியேறினார். முன்னதாக மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை அடுத்து ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்ய செய்யப்பட்டதால் அவர் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற செயலகம் உத்தரவிட்டிருந்தது.
இதையும் படிங்க: அசாம் சென்ற பிரதமர் மோடி... 11,000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் நடனமாடி உற்சாக வரவேற்பு!!
இதனால் கடந்த சில நாட்களாவே ராகுல்காந்தி அவரது அரசு பங்களாவில் இருந்து அவரது பொருட்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் 19 வருடங்களாக வசித்து வந்த டெல்லி துக்ளக் சாலையில் உள்ள 12 ஆம் எண் பங்களாவை ராகுல்காந்தி காலி செய்துவிட்டு வெளியேறினார். இதனை அடுத்து ராகுல்காந்தி, சோனியா காந்தி வசித்து வரும் எம்பர் சாலையில் உள்ள 10 ஆம் எண் பங்களாவில் குடியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மதுபான கொள்கை வழக்கில் விசாரிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்!!
சோனியா காந்தி ஜம்பக் சாலையில் உள்ள 10 ஆம் எண் பங்களாவில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் இந்த பங்களா அவர் மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே ராகுல்காந்தி சூரத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் ஏப்.20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.