கர்நாடகா தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடக்கிறது. மே 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்த் முறை மும்முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டலம் வாரியாக யாருக்கு என்ன வாய்ப்பு என்று பார்க்கலாம்.
கர்நாடகா தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி நடக்கிறது. மே 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இந்த் முறை மும்முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டலம் வாரியாக யாருக்கு என்ன வாய்ப்பு என்று பார்க்கலாம். கர்நாடக தேர்தலுக்கான அறிவிப்பு ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிடப்பட்டு, வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கியது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாளாகும், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ம் தேதி நடைபெறும். இந்நிலையில், வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி கடைசி நாளாகும். மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு, மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கர்நாடகா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் முந்திக் கொண்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டது. ஆனால், முதல்வர் வேட்பாளர் என்ற தகவலை இதுவரை வெளியிடவில்லை. முதல்வராக டிகே சிவகுமார், சித்தராமையா பெயர்கள் கூறப்பட்டாலும், இறுதியாக எந்தப் பெயரையும் காங்கிரஸ் தலைமை வெளியிடவில்லை.
undefined
பாஜகவும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. மூத்த தலைவர்கள் பலரும் கழற்றி விடப்பட்டனர். சீட் கிடைக்காத பல எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைகள் காங்கிரசுக்கு மாறுவது என்றும், சுயேட்சையாக போட்டியிடுவது என்று கூறி முன்னாள் முதல்வர் லட்சுமண் சாவடி இன்று பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில்தான் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளும் வெளியாகி உள்ளது. கருத்துக் கணிப்பு பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பே எடுக்கப்பட்டது. இது பாகம் ஒன்றாகும். மற்றொரு கருத்துக் கணிப்பு எடுக்கும்போது இன்னும் துல்லியமாக தெரிய வரும்.
இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் 2023: ஜான் கி பாத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு; யாருக்கு எவ்வளவு சீட்!!
பழைய மைசூர்:
பழைய மைசூரு பகுதிகளில் உள்ள மொத்தம் 57 இடங்களில் காங்கிரஸ் 23 இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 12 இடங்களும், காங்கிரஸுக்கு 23 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஜேடி(எஸ்) கட்சிக்கு 22 இடங்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் கர்நாடகா:
ஹைதராபாத் கர்நாடகாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 16 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. காங்கிரஸ் 23 இடங்களையும் ஜேடி(எஸ்) 1 இடத்தையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்:
பெங்களூரில் மொத்தமுள்ள 32 இடங்களில் பாஜக 15 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் ஜேடி(எஸ்) கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய கர்நாடகா:
மத்திய கர்நாடகாவில் மொத்தமுள்ள 26 இடங்களில் பாஜக 13 இடங்களையும் காங்கிரஸ் 12 இடங்களையும் ஜேடி(எஸ்) 1 இடத்தையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் மத்திய கர்நாடகாவில் பாஜகவுக்கு 13 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
இதையும் படிங்க: யார் யாருக்கு எத்தனை சதவீதம் வாக்குகள்; கருத்துக் கணிப்பில் சுவராஸ்ய தகவல்!!
மும்பை கர்நாடகா:
மும்பை கர்நாடகத்தில் மொத்தமுள்ள 50 இடங்களில் பாஜகவுக்கு 31 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 19 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜேடி(எஸ்) கட்சிக்கு இங்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கடலோர கர்நாடகா:
கடலோர கர்நாடகத்தில் பாஜக 16 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 19 இடங்களில் 16 இடங்கள் பாஜகவுக்கும் 3 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஜேடி(எஸ்) கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
ஒட்டுமொத்த கர்நாடகா:
ஒட்டுமொத்த கர்நாடகாவில் காங்கிரஸ் 38-40% வாக்குளையும் பாஜக 37-39% வாக்குகளையும் ஜேடி(எஸ்) கட்சி 16-18% வாக்குகளையும் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் இதில் மாற்றங்கள் ஏற்படலாம்.
கட்சிகள் கைப்பற்றும் மொத்த இடங்கள்:
கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று ஜன் கி பாத் ஏசியாநெட் நியூஸுடன் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸுக்கு 89-97 இடங்களும், பாஜகவுக்கு 98-109 இடங்களும், ஜேடி(எஸ்) கட்சிக்கு 25-29 இடங்களும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.