‘பயோ-மெட்ரிக்’ பாதுகாப்பு, ‘சிப்’ பொருத்தப்பட்ட நவீன ‘பாஸ்போர்ட்’..!! மத்திய அரசு விரைவில் அறிமுகம்...!!!

First Published Jan 3, 2017, 6:33 PM IST
Highlights
‘பயோ-மெட்ரிக்’ பாதுகாப்பு, ‘சிப்’ பொருத்தப்பட்ட நவீன ‘பாஸ்போர்ட்’

மத்திய அரசு விரைவில் அறிமுகம்

புதுடெல்லி, ஜன. 4-

அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதும், ‘எலெக்ட்ரானிக் சிப்’  பொருத்தப்பட்ட, போலியாக தயாரிக்க முடியாத வகையில் புதிய இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு விரைவில் வெளியிட இருக்கிறது.

வெளிநாடுகள்

இதுபோன்ற அதிகபாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பாஸ்போர்ட்கள் ஜெர்மன், இத்தாலி, கானா ஆகிய நாடுகளில் நடைமுறையில் இருப்பதால், அதேபோல கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.

மாற்றங்கள்

பாஸ்போர்ட் பெறுவதை எளிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்,  விதிமுறைகளை தளர்த்தி டிசம்பர் 23-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதில் பிறப்புச்சான்றிதழ் இணைக்கத் தேவையில்லை, சாதுக்கள், ஆதரவில்லாத குழந்தைகள், தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் ஆகியோர் பாஸ்போர்ட் எளிதாகப் பெற விதிமுறைகள் தளர்த்தப்பட்டு இருந்தன.

நவீன சிப்

இதில் பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கைகள், தேவைகளைக் கருதி மிக முக்கியமான மாற்றமும், சீர்திருத்தமும் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அதிநவீன ‘சிப்’ பொருத்தப்பட்ட, மின்னணு முறையில் பாஸ்போர்ட் தாரரின் விவரங்களை ஆய்வு செய்யும் வகையிலான பாஸ்போர்ட்டைஅறிமுகப்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

 

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த இ-பாஸ்போர்ட்டில் சிறிய சிப் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும், பாஸ்போர்ட்டில் வழக்கமான விவரங்களும் பதிவு செய்யப்பட்டு இ ருக்கும். இந்த பாஸ்போர்ட் குறிப்பாக பயோ-மெட்ரிக் பாதுகாப்பு அம்சங்களும், தகவல்களை திருடி யாரும் போலியாக தயாரிக்க முடியாத வகையில் அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் எனத் வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!