கல்வியிலும் கை வைத்த பா.ஜனதா : பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை ஆல்-பாஸ் கிடையாதாம்...

First Published Dec 25, 2016, 5:48 PM IST
Highlights


நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி மேல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்க வேண்டும் என்ற மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

தற்போது வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்து வருகிறது. இந்த கட்டாய தேர்ச்சி முறையால் கல்வியின் தரம் குறைகிறது என மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்திருந்தது. இது தொடர்பாக ஆலோசிக்க மத்திய கல்வி ஆலோசனை மேம்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தியது. அப்போதைய கல்வி மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி இராணி தலைமையில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் , பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் , 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை வேண்டாம் என தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஸ்மிருதி இராணி , 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை வேண்டாம் என அனைவரும் ஒரு மனதாக ஆதரவு தெரிவித்தாக கூறியிருந்தார். இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு துறையின் பரிந்துரையை ஏற்று , இனி மேல் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும் என சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

click me!