இந்தியாவைச் சீண்டும் நேபாளம்... புதிய 100 ரூபாய் நோட்டில் இந்தியப் பகுதிகளின் வரைபடம்!

By SG BalanFirst Published May 5, 2024, 9:10 AM IST
Highlights

"ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது 100 ரூபாய் நோட்டை மறுவடிவமைக்கவும், பழைய வரைபடத்தை மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று ரேகா சர்மா கூறினார்.

இந்திய பகுதிகளின் படங்களுடன் நேபாள ரூபாய் நோட்டு வெளியி உள்ளதாக அறிவித்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி ஆகிய சர்ச்சைக்குரிய பிரதேசங்களின் வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டை அச்சடிக்க உள்ளதாக வெள்ளிக்கிழமை நேபாளம் அரசு அறிவித்துள்ளது.

லிபுலேக், லிம்பியாதுரா மற்றும் கலாபானி உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய நேபாள வரைபடத்தை புதிய 100 ரூபாய் நோட்டுகளில் அச்சிட உள்ளனர். பிரதமர் புஷ்பகமல் தஹால் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்று அந்நாட்டு அரசின் அரசு செய்தித் தொடர்பாளர் ரேகா சர்மா தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில்.

"ஏப்ரல் 25 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது 100 ரூபாய் நோட்டை மறுவடிவமைக்கவும், பழைய வரைபடத்தை மாற்றவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று ரேகா சர்மா கூறினார்.

நிலத்தின் உரிமையாளர் யார்? கூகுள் மேப் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

ஜூன் 18, 2020 அன்று, நேபாளம் அதன் அரசியலமைப்பை திருத்தி, முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளான லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளை இணைத்து நாட்டின் புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டது. இதை இந்தியா கடுமையாகக் கண்டித்தது.

நேபாளத்தின் வரைபடம் ஒருதலைப்பட்ச செயல் என்றும் நேபாளத்தின் செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் விமர்சனம் செய்தது. லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகள் இந்தியாவுக்கே சொந்தம் என்றும் கூறியது.

சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் நேபாளம் 1,850 கிமீ எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது.

அடுத்த 4 நாட்கள் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு; கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

click me!