புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டும் விரைவில் வாபஸ்? அதிர்ச்சியூட்டும் தகவல்களால் பரபரப்பு… சொல்றது யாரு தெரியுமா?

First Published Dec 29, 2016, 7:06 AM IST
Highlights


புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டும் விரைவில் வாபஸ்?

அதிர்ச்சியூட்டும் தகவல்களால் பரபரப்பு… சொல்றது யாரு தெரியுமா?

நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு அதை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்று வருகிறது. இந்நிலையில், புதிதாகரி சர்வ் வங்கி வௌியிடப்பட்ட  ரூ. 2 ஆயிரம் நோட்டும் செல்லாது என விரைவில் அறிவிக்கப்படும் என இணையதளங்களிலவைரலாகச் செய்தி பரவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடிக்கு ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு குறித்து ஆலோசனை கொடுத்த  அணில் போகில், ரூ. 2 ஆயிரம் நோட்டு விரைவில் வாபஸ்பெறப்படலாம் என்பதை சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புழக்கத்தில் இருந்த கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்கும் வகையில், கடந்த மாதம் 8-ந்தேதி ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே, மாற்று ஏற்பாடாக புதிய ரூ.2 ஆயிரம் நோட்டையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 500, ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த 9-ந்தேதியில் இருந்து நாடுமுழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டு,  செல்லாத நோட்டுகள், தங்கம், வெள்ளி என கைப்பற்றப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிடும் போது, ரூ.500,ரூ.1000 நோட்டுகள் ரூ.15.40 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கை தீவிரமாகும் போது, ஏறக்குறைய ரூ. 3 லட்சம் கோடி கருப்பு பண முதலைகளிடம் தங்கிவிடும், வங்கிகளுக்கு ரூ. 12 லட்சம் கோடி மட்டுமே வரும். இதனால், கருப்பு பணம் வடிகட்டப்படும் என மத்திய அரசு எண்ணி இருந்தது.

ஆனால், கருப்பு பணம் பதுக்கியவர்கள், ஊழல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள்ஆகியோர், ஒரு சில வங்கி அதிகாரிகளுடன் கைகோர்த்து செல்லாத ரூபாய்களை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. போலியான வங்கிக் கணக்குகளை தொடங்கியும், அப்பாவி மக்களின் ஜன்தன் வங்கிக்கணக்கிலும் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்து, அதை வங்கி அதிகாரிகள் உதவியுடன் மாற்றும் சம்பவங்கள் அரங்கேறின.

 இது தொடர்பாக 25-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், பிரதமர் மோடி மேற்கொண்ட கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையும் தோல்வி அடையுமோ என்றஅச்சம் ஏற்பட்டது.ஆதற்கு ஏற்றார்போல், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையிலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளில் 90 சதவீதம் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என்று கூறப்பட்டு இருந்தது.

கருப்புபணத்தை ஒழிப்பதற்காக கொண்டுவரப்பட்ட உயர் பண மதிப்பிழத்தல்நடவடிக்கையில்  அனைத்து நோட்டுகளும் வங்கிகளுக்கு வந்துவிட்டால், கருப்பு பணம், கள்ள நோட்டுகளும் எங்கே? என்ற கேள்வி எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்தது, மக்களும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் பல தவறுகளை மத்திய அரசு செய்து, விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

அடுத்த திட்டமாக,  செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வாங்கப்பட்ட ரூ. 2 ஆயிரம் நோட்டையும் வாபஸ் பெற்று ஒட்டு மொத்தமாக கருப்புபணத்தை ஒழிக்க திட்டமிட்டு இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வருகின்றன.

 

இதற்கு ஏற்றார்போல், பிரதமர் மோடிக்கு ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு குறித்து பிரதமர் மோடிக்கு ஆலோசனை கொடுத்ததாக கூறப்படும் அணில் போகில் சூசகமாக தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் உள்ள ‘ஆர்கேட் பிஸ்னஸ் காலேஜ்’ என்ற கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அணில் போகில் கலந்து கொண்டார். அப்போது ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு தொடர்பாக மாணவர்கள் கேட்ட கேள்விக்களுக்கும், சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாட்டை தீர்க்கவே புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நான் ஒரு சின்ன உதாரணம் மூலம் கூற விரும்புகிறேன். இதய அறுவை சிகிச்சை நடக்கும் போது, ரத்த ஓட்டத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும்.

தேசிய நெடுஞ்சாலை பழுதடையும் போது, மாற்றுப் பாதை போட்டு வாகனங்களை அதில் செல்லுமாறு அறிவுறுத்துவோம். ஆனால், நிரந்தரமாக மாற்றுப் பாதையில் இயக்குவதில்லை. பிரதான நெடுஞ்சாலை சரி செய்யப்பட்டவுடன் அது மூடப்படும்.

அதுபோலவே இப்போது பிரதான சாலை சரிசெய்யப்பட்டு வருகிறது. அது சீர்செய்யப்பட்டபின் மாற்றுப்பாதை எதற்கு?. பிரதான சாலைக்கு திரும்ப வேண்டியதுதானேஸநம் பணப் பொருளாதாரம்  என்பது சீரற்ற பாதை. நமது பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்துவிடும்.

நம்நாட்டுக்கு ரூ.50,  ரூ100, ரூ.500 நோட்டுகளே போதுமானது, உயர்மதிப்பு கொண்ட ரூ.2000  நோட்டுகள் தேவைப்படாது. நம் நாட்டில் கருப்பு பணம் என்பது 6 சதவீதம் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால், இது உறுதியான தகவல் இல்லை.

உடலில் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் போது சில நல்ல செல்களும் அழிக்கப்படும். அதில் தவறில்லை.  நம்நாட்டின் பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதம் வளர்ச்சி அடைகிறது என்றால், அதற்கு ஈடாக, கருப்புபணத்தின் மூலம் வளரும் பொருளாதாரம் 11 சதவீதம் வளர்கிறது '' எனத் தெரிவித்தார்.

ஆதலால், அணில் போகிலும், விரைவில் நாட்டில் உயர்மதிப்பிலான ரூ. 2000 நோட்டும் செல்லாது  என அறிவிக்கப்படலாம் என சூசகமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தி ‘போஸ்ட் கார்டு’, ‘ஏ.பி.பி.லைவ்’ ஆகிய தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 


 

click me!