50 ரூபாய் நோட்டுகளைத் தொடர்ந்து விரைவில் புதிய 200 ரூபாய் நோட்டுகள் !!  மத்திய அரசு அறிவிப்பு….

First Published Aug 24, 2017, 7:42 AM IST
Highlights
New 200 rupees note will be published soon


புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுக்கள் நேற்று முதல் புழக்கத்துக்கு வந்துள்ள நிலையில், விரைவில் 200 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ளது.

கருப்புப் பணம் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி மத்திய அரசு கருப்பு 500 மற்றும் 1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.

இதையடுத்து, புதிய 500  மற்றும் 2,000  ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. அப்போது 50 மற்றும் 100 ரூபாய்  நோட்டுகள் குறைவான புழக்கத்தில் இருந்ததால் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதில் மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாயினர்.

இதன்காரணமாக அதிக அளவில் 100, 50, 20  நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு புழக்கத்தில் விட்டது. அப்போதும் கூட 2000 ரூபாய்  நோட்டை மாற்றுவதற்கு ஏற்ப குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை தகுந்த புழக்கத்தில் இல்லை.

இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு 200 ரூபாய்  நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசிடம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை நேற்று வெளியிட்டது.

இந்நிலையில் புதிய 200  ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த ரூபாய் நோட்டுகள் இன்னும் ஓரிரு நாட்களில் புழக்கத்தில் விடப்படும் என்றும்,  புதிய 200 ரூபாய் நோட்டுகளால் நாட்டின் பணப்புழக்கத்தின் நிலைமை மேம்படும் என்று ரிசர்வ் சங்கி அறிவித்துள்ளது.

 

 

click me!