நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 2 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு முன்பாக சோனியா காந்தி சில கோரிக்கைகள் வைத்திருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கவும், உடல் நிலை கருதியும் அமலாக்கப்பிரிவினர் அதை நிறைவேற்றினர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம், நேஷனல் ஹெரால்டு என்ற நாளேடு தொடங்கப்பட்டது. இந்தநிறுவனத்தை நடத்த ரூ.90 கோடியை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் நேஷனல் ஹெரால்ட் நிறுவனம் நஷ்டப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு நாளேடு நிறுத்தப்பட்டது. பின்னர் 2016ம் ஆண்டு முதல் நேஷனல் ஹெரால்ட் நாளேடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டபோது, அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர்களின் ஒப்புதல்களைப் பெறவில்லை. இந்த நிறுவனத்தின் 76% பங்குகள் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடமும், 24 % பங்குகள் ராகுல் காந்தியிடமும் உள்ளன.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள அசோசியேட்டட் ஜர்னல் பங்குகளை வெறும் ரூ.50 லட்சத்துக்கு மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்திக்கு அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவு, துறைகளும் கலைப்பு: சரத்பவார் அதிரடி
இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஏற்கெனவே அமலாக்கப்பிரிவு விசாரணையில் ஆஜராகிவிட்டார். அவரிடம் 50 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜராகமல் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை ஆஜாகினார்.
மத்திய டெல்லியில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள வித்யுத் லேன் பகுதியில் அமைந்துள்ள அமலாக்கப்பிரிவு தலைமை அலுவலகத்தில் சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராகினார். அவருடன் அவர் மகள் பிரியங்கா காந்தி உடன் சென்றார்.
சோனியா காந்தியிடம் நண்பகல் 12.30மணிக்கு 5 அதிகாரிகள் கொண்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். ஏறக்குறைய 2 மணிநேர விசாரணைக்குப்பின், சோனியா காந்தி, தனது உடல்நிலை, வயது காரணாக அனுப்பி வைக்கப்பட்டார்.
இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்
அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு சோனியா காந்தி வரும் முன், சில கோரிக்கைகளை வைத்திருந்தார். அதை அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் வழங்கினர்
1. அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தன்னிடம் விசாரணை நடத்தும் அறை பெரிதாகவும், காற்றோட்டமாகவும், இருக்க வேண்டும்
2. விசாணை நடத்தும் அதிகாரிகள் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
3. மருந்துகள் அடிக்கடி எடுக்கவேண்டும் என்பதால் மகள் பிரியங்கா காந்தி விசாரணையின் போதுஉடன் இருக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளுக்கும் அமாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மதித்தனர்.
நண்பர்கள் சொல்லாததைக் கூட கேட்கும் பிரதமர் மோடி, மக்களின் பேச்சைக் கேட்பாரா: ராகுல் காந்தி விளாசல்
3 பிரிவுகளாக விசாரணை
சோனியா காந்தியிடம் 3 பிரிவுகளில் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு அதிகாரகள் திட்டமிட்டுள்ளனர். முதலாவதாக, சோனியா காந்தியின் தனிப்பட்ட விவரங்கள், பங்கு வைத்திருக்கும் நிறுவனங்கள், வரி செலுத்துவது ஆகியவை பற்றி கேட்கப்பட உள்ளது. 2வதாக, அசோசியேட் ஜர்னலுக்கும் யங் இந்தியாவுக்கும் இருக்கும் தொடர்பு, 3வதாக காங்கிரஸ் கட்சிக்கும் இந்த நிறுவனங்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கேள்வி கேட்படலாம் எனத் தெரிகிறது.