நேஷனல் ஹெரால்டு வழக்கு..! அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோனியா காந்தி ஆஜர்...நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

By Ajmal Khan  |  First Published Jul 21, 2022, 12:21 PM IST

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று அமலாக்கத் துறை இயக்குநரகம் முன்பு ஆஜரான நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டத்தில ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துகள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரையும் விசாரணை செய்ய அமலாக்கத்துறை முடிவுசெய்தது. இதனையடுத்து ராகுல் காந்தியிடம் 51 மணி நேரம் விசாரணை நடத்தி அமலாக்கத்துறை முடித்துள்ளது. 

ncp sharad pawar: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவு, துறைகளும் கலைப்பு: சரத்பவார் அதிரடி

Tap to resize

Latest Videos

president election result date: குடியரசுத் தலைவர் தேர்தல்: எம்.பி.க்கள் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு கடந்த ஜூன் 8ஆம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் சோனியா காந்திக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உடல்நிலை குணமாகும் வரை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டிருந்தார்.  இதை அமலாக்கத் துறை ஏற்றுக் கொண்டது. ஜூலை 21 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பியது. இதை ஏற்ற சோனியா காந்தி இன்று ஆஜரானார். அவருடன் அவரது மகள் பிரியங்க காந்தியும் உடன் சென்றார்.  இந்தநிலையில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக கூறி  சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்திற்கு அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது.

அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி இன்று ஆஜரான நிலையில்  விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி முழக்கமிட்டனர் இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் அலுவல்கள் பாதிக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்..! சேதமடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியான சி.வி.சண்முகம்

 

click me!