president election result date: குடியரசுத் தலைவர் தேர்தல்: எம்.பி.க்கள் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

By Pothy Raj  |  First Published Jul 21, 2022, 12:10 PM IST

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி காலை 11 மணிக்குத் தொடங்கியுள்ளது.


குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி காலை 11 மணிக்குத் தொடங்கியுள்ளது.

நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய கடந்த 18ம் தேதி வாக்குப் பதிவு நடந்தது. நாடுமுழுவதும் உள்ள மாநிலச் சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
 இந்த வாக்குகள் இன்று நடக்கிறது. காலை 11மணி முதல் நாடாளுமன்றத்தில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

Tap to resize

Latest Videos

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவு, துறைகளும் கலைப்பு: சரத்பவார் அதிரடி

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகிறார்கள்.

இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்

கடந்த 18ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த வாக்குப்பதிவின்போது, 728 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.  இதில் 9எம்எல்ஏக்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல முடியாத சூழலில் இருந்ததால், அவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 98.91 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.

நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களில் 4 ஆயிரத்து 33 எம்எல்ஏக்கள், 728எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் செவ்வாய்கிழமை மாலையே நாடாளுமன்றத்தின் வாக்கு எண்ணும் அறையான எண் 63க்கு கொண்டுவரப்பட்டது. அந்த அறையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அனைத்து மாநிலங்களிலும் இருந்து வாக்குப் பெட்டிகள் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டன. 

 

Counting of votes of to get underway from 11am in Room 63 Parliament House, New Delhi today pic.twitter.com/btsvxlQ2rR

— Spokesperson ECI (@SpokespersonECI)

வாக்குகள் எண்ணும் இடத்தில், வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள், மாநிலங்களவை செயலாளருக்கு உதவியாக இருக்கும் அதிகாரிகள், வேட்பாளர்கள்,ஒவ்வொரு வேட்பாளரின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பார்வையாளர்கள், ஊடகத்தினர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்... பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி!!

எம்.பி.க்கள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இன்று மாலை 4 மணிக்குள் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

click me!