குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளார்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளார்
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய கடந்த 18ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகிறார்கள்.
கடந்த 18ம் தேதி நாடுமுழுவதும் உள்ள மாநிலச் சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
763 எம்.பி.க்களும், 9எம்எல்ஏக்கள் சொந்த மாநிலத்துக்குச் செல்ல முடியாத சூழலில் இருந்ததால், அவர்களுக்கும் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 98.91 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.
ராகுல் காந்தி அரசியல்ரீதியாக பயனற்றவர்: நாடாளுமன்றத்தை முடக்கக்கூடாது: ஸ்மிருதி இரானி விளாசல்
நாடுமுழுவதும் உள்ள மாநிலங்களில் 4 ஆயிரத்து 33 எம்எல்ஏக்கள், 728எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் செவ்வாய்கிழமை மாலையே நாடாளுமன்றத்தின் வாக்கு எண்ணும் அறையான எண் 63க்கு கொண்டுவரப்பட்டது. அந்த அறையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். அனைத்து மாநிலங்களிலும் இருந்து வாக்குப் பெட்டிகள் விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டன.
இந்த வாக்குகள் அனைத்தும் இன்று காலை நாடாளுமன்றத்தில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்குகள் எண்ணும் இடத்தில், வாக்கு எண்ணிக்கை அதிகாரிகள், மாநிலங்களவை செயலாளருக்கு உதவியாக இருக்கும் அதிகாரிகள், வேட்பாளர்கள்,ஒவ்வொரு வேட்பாளரின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பார்வையாளர்கள், ஊடகத்தினர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
எம்.பி.க்கள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததது.
இதன்படி, எம்.பிக்கள் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டநிலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 748 எம்.பிக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகளின் மதிப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 600.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு 540 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வாக்குகளின் மதிப்பு, 3.78 லட்சமாகும்.
எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹா208 வாக்குகள் பெற்றார். இதன் வாக்கு மதிப்பு 1,45,600 வாக்குகளாகும். 15 எம்.பிக்கள் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.