உஷார் பெற்றோர்களே..! மொபைல் போன் வெடித்து சிறுவன் பலி..அதிக நேரம் கேம்ஸ் விளையாடியதன் விளைவு..!

First Published Apr 11, 2018, 2:42 PM IST
Highlights
mobile phone burst and a boy dead on the spot


சத்தீஸ்கர் மாநில, கொரியா மாவட்டத்தில் உள்ளது குட்றபாரா  கிராமத்தில் வசித்து வரும் சிறுவன் ரவி சன்வான். இவருக்கு  வயது 12.  

இவர் அடிக்கடி மொபைல் போனில் விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில், மொபைலில் சார்ஜ் போட்டுக்கொண்டே கேம்ஸ் விளையாடி வந்துள்ளார் இந்த சிறுவன்.

அப்போது திடீரென, அதிக சப்தத்துடன் வெடித்து சிதறி உள்ளது அந்த மொபைல்.

அதிக நேரம் விளையாடியதும் அதுவும் சார்ஜ் போட்டுக்கொண்டே விளையாடியதால்,மொபைல் போன்  சூடு ஏறி வெடித்துள்ளதாக  தெரிகிறது.

போன் வெடித்ததில், அந்த சிறுவனின் வயிற்று பக்கத்தில் அதிக ஆவில் காயம் ஏற்பட்டு, குடல் வெளியே வந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், உடனே  சிறுவனின் வயிறை  துணியால் சுற்றி, அம்பிகாபூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு,சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி சில மணி நேரத்தில் அந்த சிறுவன் உயிர் இழந்தார்.

இந்த தகவலால் மற்ற பெற்றோர்களுக்கும் இது ஒரு பாடமாக  அமைய வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

click me!