துபாயில் 3 நாள் நடக்கும் இந்தியா குளோபல் மாநாடு: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்

By SG Balan  |  First Published Nov 2, 2023, 8:23 PM IST

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையானது உலகளாவிய பொறுப்புணர்வுக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும்.


இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவை ஒரு விரிவான தளத்திற்கு உயர்த்தும் வகையில் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்தியா குளோபல் ஃபோரம் (IGF) நிகழ்வு இந்தியா - அமீரகம் இடையேயான நல்லுறவின் ஆழத்தையும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு மூன்றாவது முறையாக அந்த மாநாடு நடைபெற்ற உள்ளது. இதில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் கலந்துகொள்ள உள்ளன.

நவம்பர் 26 முதல் 29 வரை துபாய் நகரில் உள்ள தாஜ் எக்சோடிகாவில் இந்த மாநாடு நடக்க உள்ளது. 3 நாட்கள் நீடிக்கும் இந்த மாநாட்டில் 120 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பேச உள்ளனர். உலக நாடுகளின் தலைவர்கள், வணிக நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்நுட்பம், வர்த்தகம் போன்ற துறைகள் சார்ந்த வல்லுநர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்த நிகழ்வைப் பற்றி கருத்து தெரிவித்த மாநாட்டின் நிறுவனர் மற்றும் தலைவர் மனோஜ் லத்வா கூறுகையில், “2022ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் சொன்னது மிகவும் பொருத்தமானது. இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையேயானது லட்சிய உறவு. இரு நாடுகளின் பலன்களுடன் நின்றுவிடமால் உலகளாவிய நன்மைகளை உண்டாக்கக்கூடியது என்றார்" என நினைவுகூர்கிறார்.

விளையாடும்போது பிளாஸ்டிக் வலையில் சிக்கி உயிரிழந்த 5 வயது சிறுவன்; மும்பையில் துயர சம்பவம்

"வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா இடையேயான பொருளாதாரப் பாதை போன்ற திட்டங்களில் விரிவான ஒத்துழைப்புக்கு இந்த நிகழ்வு வழிவகுக்கும் என நம்புகிறோம்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

"மிகக் குறைந்த கார்பன் உமிழ்வைக் கொண்டிருந்தாலும், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய கண்டமாக ஆப்பிரிக்கா உள்ளது. இதன் விளைவாக ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரம், பொது சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் பேரழிவுகள் ஏற்படும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் இந்த விளைவுகளைத் தணிப்பது பற்றியும் விவாதிக்கப்படும்" என்றும் மனோஜ் லத்வா குறிப்பிடுகிறார்.

"இந்த மாநாடு உலகெங்கிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு தளத்தையும் உருவாக்கிக் கொடுக்கும். அதிநவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். நீண்டகால பிரச்சினைகளுக்கு தெற்குலக நாடுகள் கண்டுபிடிக்கும் நவீன தீர்வுகளை முன்வைக்கவும் வாய்ப்பாக அமையும்" என்றும் கூறினார்.

"இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளால் வழங்கப்படக்கூடிய கூட்டுத் தலைமையானது, பிராந்திய செழுமைக்கு மட்டுமல்ல, உலகளாவிய சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும்" என்று லட்வா கூறினார்.

கண்டெய்னர் லாரிகள் சென்னைக்குள் வரக்கூடாது! தீபாவளியை முன்னிட்டு தடை உத்தரவு!

click me!