இல்லத்தரசிகளுக்கு கடன் கொடுக்காதீங்க.. சர்ச்சையை கிளப்பிய மம்தா

Published : Jul 09, 2022, 05:50 PM IST
இல்லத்தரசிகளுக்கு கடன் கொடுக்காதீங்க.. சர்ச்சையை கிளப்பிய மம்தா

சுருக்கம்

‘இல்லத்தரசிகளுக்கு யாரும் கடன் கொடுக்க கூடாது’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

100 நாட்கள் வேலை முடிந்த பிறகு, மத்திய அரசு பங்களா ஆவாஸ் யோஜனா வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும், UGCO மாணவர் உதவித்தொகையை முறையாக வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு புத்தகக் கண்காட்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, ‘ஒரு ஆண் தன் புத்தகங்களையும் , மனைவியையும் யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பணத்தைத் திரும்பப் பெற முடியாது’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ்சை தே* என்று அவர் திட்டினார்.. எடப்பாடி பழனிசாமி ரசித்தார் - மருது அழகுராஜ் கொடுத்த அதிர்ச்சி

அவரது இந்த பேச்சு அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மம்தா பானர்ஜி இதன் வாபஸ் பெற வேண்டும் என பெண்கள் அமைப்புகள் தெரிவித்துள்ளது. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மம்தா, 'இல்லத்தரசிகளுக்கு கடன்  கொடுத்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது’ என சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தலைவர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவை அழிக்க பார்க்கும் 3 நபர்கள்.. ஓபிஎஸ் போட்ட டீல்.! அதிமுக பிரமுகர் வெளியிட்டசீக்ரெட்

பத்து ஆண்டுகளுக்கு முன், புத்தகக் கண்காட்சியில் மம்தா, ​​'இல்லத்தரசிகள் என்ன ரியல் எஸ்டேட்டா ? அவர்களுக்கு கடன் கொடுக்க முடியுமா ? கடன் கொடுத்தால் திரும்ப தான் கிடைக்குமா ? என்று இது போன்ற சர்ச்சை கருத்துக்களை கூறி ஒட்டுமொத்த பெண்களின் கண்ணியத்தையும் குலைப்பதாக விமர்சிக்கப்பட்டது. பாஜக தலைவர் அமித் மாளவியாவும் இதை வலியுறுத்தி உள்ளார். மம்தாவின் இந்த காணொளியை வெளியிட்டு குற்றஞ்சாட்டி உள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு.. சீனா விசா.. லண்டன் சாவி - சிபிஐ வலையில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்.! விரைவில் கைதா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாளை பெங்களூரில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! வெளியான லிஸ்ட்!
மோடிக்கு ஏன் தலைமை நீதிபதியை பிடிக்கவில்லை.. மக்களவையில் ராகுல் காந்தி சரமாரி கேள்வி!