ஒரு சமோசா சாப்பிட்டால் ரூ.51 ஆயிரம் பரிசு! நடிகர் சூரி புரோட்டா காமெடி தெரியுமா? உ.பி. ஸ்வீட் ஸ்டால் விளம்பரம்

Published : Jul 09, 2022, 01:38 PM ISTUpdated : Jul 09, 2022, 02:01 PM IST
ஒரு சமோசா சாப்பிட்டால் ரூ.51 ஆயிரம் பரிசு! நடிகர் சூரி புரோட்டா காமெடி தெரியுமா? உ.பி. ஸ்வீட் ஸ்டால் விளம்பரம்

சுருக்கம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பருவமழைக் காலம் வந்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆனால், சமோசா இல்லாத மழைக்காலம் நிறைவாக இருக்குமா என்பது தெரியாது. 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பருவமழைக் காலம் வந்துவிட்டது. பல்வேறு மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆனால், சமோசா இல்லாத மழைக்காலம் நிறைவாக இருக்குமா என்பது தெரியாது. 

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஸ்நாக்ஸ் சமோசா என்பதை மறுக்க முடியாது. அதிலும் மழைக்காலத்தில் சுடச்சுட சமோசா, சட்னி அல்லது சாஸ், அல்லது சோலே, தஹி சேர்தது சாப்பிடுவது அலாதி சுவைதான். சமோசா விரும்பிகள் குறிப்பாக வடமாநிலங்களில் இருக்கவே முடியாது. 

ஆனால், உத்தரப்பிரதேசம் மீரட்டில் உள்ள கவுசால் ஸ்வீட் ஸ்டால் ஒன்று சமோசா விரும்பிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் விளம்பரம் செய்துள்ளது. என்னவென்று கேட்கிறீர்களா… ஒரு சமோசா சாப்பிட்டு முடித்தால் ரூ.51 ஆயிரம் பரிசாம்.

 

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் 50 புரோட்டா சாப்பிடுபவர்களுக்கு ரூ100 பரிசு தருவதாக ஹோட்டல் உரிமையாளர் விளம்பரம் செய்திருப்பார். நடிகர் சூரி அதை சாப்பிட முயற்சிக்கும் காமெடி அனைவருக்கும் தெரி்ந்திருக்கும்.

ஆனால், இங்கு 100 சமோசா சாப்பிடத் தேவையில்லை,ஒரே ஒரு சமோசா மட்டும் சாப்பிட்டால் போதும் ரூ.51 ஆயிரம் பரிசு தருகிறார்கள்.

அப்படி என்ன சமோசாவில் இருக்கிறது எனக் கேட்கிறீர்களா. சமோசா எடைதான் சிக்கல். இந்த ஸ்வீட் ஸ்டால் செய்திருக்கும் சமோசா எடை 8 கிலோ. இந்த 8 கிலோ சமோசாவை சாப்பிட்டு முடித்தால்தான் ரூ.51ஆயிரம் பரிசு. 

கொஞ்சம் மூச்சு வாங்குதுல........!

உருளைக்கிழங்கு, பச்சைப்பயிறு,பனீர், சீஸ், உலர் பழங்கள் அனைத்தும் சேர்த்து சுவையாக சமைக்கப்பட்ட இந்த சமோசாவை மிச்சம் வைக்காமல் சாப்பிட்டால் ரூ.51 ஆயிரம் பரிசு தருகிறார்கள். உணவுகள்பற்றி வீடியோ வெளியிடும் சாஹத் ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 8 கிலோ சமோசா குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் 8 கிலோ சமோசா எவ்வாறு  செய்யப்பட்டது என்பது குறித்த மற்றொரு வீடியோவையும்  வெளியிட்டுள்ளனர். இந்த சமோசா எண்ணெய் கடாயில் வேகும் போது மக்கள் சூழ்ந்து நின்று வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

 

இந்த சமோசா குறித்து கவுசால் ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர் சுபம் கூறுகையில் “ இதுவரை 8 கிலோ சமோசாவை யாருமே வெற்றிகரமாகச் சாப்பிட்டு முடிக்கவி்ல்லை. ஆனால் பாகுபலி சமோசா தொடர்ந்து நாங்கள் உருவாக்குவோம். விரைவில் 10 கிலோ சமோசாவும் தயாரிக்க இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!
AI என்றாலே இந்தியாதான்.. மைக்ரோசாப்ட் மிகப்பெரிய ஆசிய முதலீடு.. ரூ.1.5 லட்சம் கோடி!