நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு என்னென்ன தெரியுமா?

First Published Apr 19, 2018, 3:25 PM IST
Highlights
CBSE issues Dress code for Neet Exam


இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மருத்துவ படிப்புகள் தொடர விரும்பும் மாணவர்களுக்கு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின்போது, தேர்வெழுதும் மாணவர்களுக்கு பல்வேறு உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனால், தேர்வெழுதும் முன்பு மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்கள் வெளிர் நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டும். அரைக்கை சட்டைகள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும். ஷூ அணியக் கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது.

பெரிய பட்டன்களைக் கொண்ட சட்டைகளை அணிதல் கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும். தொலைத்தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வின்போது துப்பட்டா அணியக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது, பாக்கெட் வைத்த சட்டை போடக் வடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ விதித்தது. அது மட்மல்லாது டார்ச் அடித்து காது முதல் உள்ளாடை வரை தீவிர சோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த ஆண்டு முன் கூட்டியே ஆரைடக் கட்டுப்பாட்டு விதிகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

click me!