28-ந்தேதி வெளியாகும் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு முடிவுகள்...

First Published May 26, 2017, 9:21 PM IST
Highlights
CBSE Board Class 12 results 2017 will be declared soon according to media reports even as the board has not made an announcement yet


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நாளை(28-ந்தேதி) வௌியிடபபடும் என்று சி.பி.எஸ்.இ. அமைப்பு அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் 10.98 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை மார்ச்12ந் தேதி முதல் ஏப்ரல் 9 ந்தேதி வரை எழுதினர். சென்னை மண்டலத்தில் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

இந்நிலையில் கடினமான கேள்விகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகி வந்தது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ''சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த நேரத்தில் வெளியாகும். இதில் தாமதம் ஏற்படாது '' என்றார்

இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம வகுப்பு தேர்வு முடிவுகள் 28-ந்தேதி வௌியாகும் என்றும் டெல்லி, உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி தேர்வு முடிவுகள் பின்பற்றி ெவளியாகும் என சி.பி.எஸ்.இ.நேற்று அறிவித்துள்ளது.

 

 

click me!