கார் டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.9,800 கோடி டெபாசிட்

First Published Nov 29, 2016, 10:52 AM IST
Highlights


பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் கார் டிரைவராக பணி செய்து வருபவர் பல்விந்தர் சிங். இவருக்கு கடந்த 4-ந்தேதியன்று இவர் கணக்கு வைத்திருக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலாவில் இருந்து ஒரு செல்போனுக்கு ஒரு செய்தி வந்தது.

அதில் அவருடைய வங்கிக்கணக்கு இருப்பு, ரூ.9 ஆயிரத்து 805 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகச் அதில் குறிப்பிடப்பட்டு இருந்து. இந்த செய்தியைப் பார்த்து அவர் அதிர்ந்துவிட்டார். சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் இருந்த பல்விந்தர்சிங்குக்கு அந்த மகிழ்ச்சி ஒருநாள் கூட நீடிக்கவில்லை. அடுத்தநாளை அந்த தொகை அவரின் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. 

இது குறித்து பல்விந்தர்சிங் கூறுகையில், “ நான் எனது கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த ரூ. 9 ஆயிரத்து 800 கோடி திடீரென்று எடுக்கப்பட்டது குறித்து அறிய 7-ந்தேதி வங்கிக்கு சென்றேன். ஆனால், யாரும் முறையாக எனக்கு பதில் அளிக்கவில்லை, என்னை கண்டுகொள்ளவும் இல்லை. அப்போது, அங்கு வந்த வங்கி மேலாளர் என்னிடம் இருந்த  பழைய பாஸ்புக்கை வாங்கிவைத்துக் கொண்டு புதிய பாஸ்புக்கை கொடுத்தார். 

 

அதில் என்னுடைய பழைய வங்கிக்கணக்கில் இருந்த இருப்புபணம் மட்டுமே இருந்தது. என் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.9 ஆயிரம் கோடி இடம் பெறவில்லை. நான் பிரதான் மந்திரியின் ஜன்தன் கணக்கில் வங்கிக்கணக்கு தொடங்கினேன். கடைசியாக அதில் ரூ.3 ஆயிரம் இருந்தது அந்த பணம் மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டு இருந்து” என்றார்.

இது குறித்து வங்கி மேலாளர் ரவிந்திரகுமாரிடம் கேட்டபோது இது குறித்து எந்த விவரமும் அளிக்க மறுத்துவிட்டார். இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று மட்டும் தெரிவித்தார். 

வங்கியின் மூத்த மேலாளர் சந்தீப் கார்க் கூறுகையில், “ பல்விந்திர்சிங் கணக்கில் பணம் குறித்து கம்ப்யூட்டரில் என்ட்ரி போடும்போது, அதில் அலுவலர்கள் தெரியாமல், வங்கியின் கணக்கு எண்ணை குறிப்பிட்டுவிட்டார்கள். அதனால், வந்த தவறுதான். மறுநாள் அந்த தவறைக் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டோம்.வேறுஒன்றும் இல்லை என மழுப்பினார்.

இது குறித்து பாட்டியாலா வருமானவரித்துறை துணை ஆணையர் பூபிந்தர்சிங் ராய் கூறுகையில், “ இந்த விசயத்தில் வங்கி அதிகாரிகள் கவனக்குறைவாக நடந்து கொண்டார்கள் என்று நம்புவதற்கு சாத்தியமில்லை. யாரோ சிலர் வந்து இதுபோன்ற மிகப்பெரிய தொகையை டெபாசிட் செய்து இருக்கிறார்கள். இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். 

ஆனால், பணம் பல்விந்தர்சிங் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதற்கான செல்போன் செய்தி சரியாக அனுப்பப்பட்டு இருக்கிறது. பல்விந்தர்சிங்கும், தனது பாஸ்புக்கில் ரூ.9800 கோடியை கணினி முறையில் என்ட்ரி செய்துள்ளார். அதற்கான ரசீதையும் ஏ.டி.எம்.களில் இருந்து பெற்றுள்ளார். வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது” என்றார். 

இது தொடர்பாக பாட்டியாலா, பர்னாலா, சங்ரூர் ஆகிய நகரங்களில் இருந்து வருமானவரித்துறையினர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

click me!