40 பெண்களுக்கு ஒரே கணவர்.. சாதிவாரி கணக்கெடுப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.

By Ramya s  |  First Published Apr 27, 2023, 3:24 PM IST

பீகாரில் நடைபெற்று வரும் சாதிவாரி கணக்கெடுப்பில் 40 பெண்களுக்கு ஒரே நபர் கணவராக இருப்பது தெரியவந்துள்ளது.


பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் தலைமையிலான  அரசாங்கம் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பில்  அர்வால் பகுதியில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒரு வினோதமான தகவல் வெளிவந்தது. இந்த கணக்கெடுப்பில் 40 பெண்களுக்கு ஒரே நபர் கணவராக இருப்பது தெரியவந்துள்ளது. பெயரிடப்பட்டுள்ளனர். அந்த நபரின் பெயர் ரூப்சந்த். சில பெண்கள் தங்களின் கணவராக ரூப்சந்த் பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதே போல் தங்களின் குழந்தைகளுக்கும் ரூப்சந்த் தான் என்று தந்தை என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : வாகன ஓட்டிகளே கவனம்.. இந்த போர்டு இருந்தால், வாகனத்தை நிறுத்த வேண்டாம்.. ஆபத்து..

Tap to resize

Latest Videos

இந்த பெண்களுக்கு நிலையான முகவரி இல்லாததாலும், வார்டு எண். 7ல் உள்ள சிவப்பு விளக்கு பகுதியில் மட்டுமே வசிப்பதாலும், அவர்கள் ரூப்சந்தை தங்கள் கணவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

சுவாரஸ்யமாக, ரூப்சந்த் யார், எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அங்கு சென்ற ராஜீவ் ரஞ்சன் ராகேஷ், சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் சில பெண்களிடம் பேசியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் " பெண்களின் ஆதார் அட்டையில் கணவர்-ரூப்சந்த் என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூப்சந்த் இங்குள்ள 40 பெண்களின் உறவினர். இந்த ரூப்சந்த் யார் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்," என்று தெரிவித்தார்

சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் அம்மாநிலம் முடிவு செய்தது. அதை தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவான தீர்மானங்கள் 2019 மற்றும் 2020ல் இரண்டு முறை பீகாரில் இரு அவைகளின் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.  அதன்படி, பீகாரில் கடந்த ஜனவரி 7-ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏப்ரல் 15ம் தேதி முதல் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறடு. இந்த பணிகள் மே மாதத்திற்குள் நிறைவடையும்.

சாதி அடிப்படையிலான தலைவர்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் என்று முதல்வர் நிதிஷ்குமார் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மகா கூட்டணி அரசு எடுத்த நல்ல முயற்சி. மக்களின் பொருளாதார நிலை மற்றும் அவர்களின் ஜாதி தொடர்பான தரவுகள் தலைமைக் கணக்கின் போது சேகரிக்கப்படும், இதன் மூலம் எத்தனை பேர் ஏழைகள் மற்றும் அவர்களை முன்னேற்றத்திற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசு அறிந்து கொள்ள முடியும், ”என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சத்தீஸ்கர் நக்சல் தாக்குதல்.. முக்கிய எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு படையினர்.

click me!