Watch Video: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!

By SG Balan  |  First Published Apr 27, 2023, 3:16 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தமிழ் தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்தச் சொன்னது சலசலப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா தமிழ் தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்தச் சொன்னது சலசலப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிவமோகாவில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கே. ஈஸ்வரப்பாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டிருந்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக்கொண்டிருந்தனர்.

Tap to resize

Latest Videos

கே. எஸ். ஈஸ்வரப்பா மட்டும் தமிழ் தாய் வாழ்த்துப் பாடலைக் கேட்டதும் அதனை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநிலத்தின் கன்னட வாழ்த்து கீதத்தை போடுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது கவனிக்கத்தக்கது.

மத ரீதியான இட ஒதுக்கீடு சட்டவிரோதமானது: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

 

இது எங்க குடும்பத்துக்கு போதாத காலம்! பிரியங்கா காந்தி கவலை

கர்நாடக பாஜகவில் மூத்த தலைவரான கே. எஸ். ஈஸ்வரப்பாவுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால், அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மகனுக்காவது சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியது. சிவமோகா தொகுதி வேட்பாளராக, சன்னபாசப்பா என்ற புதியவரை கட்சி தேர்வு செய்தது. இதனால், விரக்தி அடைந்த அவர் தேர்தல் அரசியலில் இருந்து விலக முடிவு செய்தார். இருந்தாலும் மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சர்ச்சைகளுக்குப் பேர் போன ஈஸ்வரப்பா, செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, பாஜகவுக்கு ஒரு இஸ்லாமியரின் வாக்கும் வேண்டாம் என்று கூறினார். அதுமட்டுமின்றி பாஜகவுக்கு வாக்களிக்கும் முஸ்லீம் தேசபக்தர்கள் இருந்தாலும் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும் வாக்களிக்கட்டும் என்று தெரிவித்தார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான கருத்துகளைக் கூறி வரும் கே. எஸ். ஈஸ்வரப்பா, கடந்த மார்ச் மாதம் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, அல்லாவை கேலி செய்யும் வகையில் பேசினார். உரையாற்றிக்கொண்டிருந்தபோது, ​​அருகில் உள்ள மசூதியில் இருந்து தொழுகை நடைபெறும் சத்தம் கேட்டது. "நான் எங்கு சென்றாலும், இது எனக்குத் தலைவலியாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வர உள்ளது. இன்று இல்லாவிட்டாலும் விரைவில் இதற்கு முடிவுக்கட்டப்படும்" என்று ஈஸ்வரப்பா கூறி இருந்தார்.

PAN CARD: ஒருவர் எத்தனை பான் கார்டு வைத்துக்கொள்ளலாம்? மீறினால் என்ன தண்டனை?

click me!