40 நாட்களாகியும் தீர்வு கிடைக்கவில்லை - சந்திரபாபு நாயுடு அதிருப்தி

First Published Dec 21, 2016, 10:17 AM IST
Highlights


ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில், 40 நாட்களாகியும் தீர்வு கிடைக்கவில்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிருப்தி அடைந்துள்ளார்.

விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் கூட்டம் விஜயவாடாவில் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதை நாம் விரும்பவில்லை. ஆனாலும், அந்த அந்த முடிவை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துவிட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டு, 40 நாள்களுக்கு மேலாகியும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இதுவரை தீர்வு காண முடியவில்லை. தற்போது இது சிக்கல் நிறைந்த பிரச்னையாகி விட்டது.

இந்த விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து தினமும் சிந்திக்கிறேன். என் தலையை உடைத்துக் கொள்கிறேன். ஆனாலும் இதற்கு தீர்வு காண முடியவில்லை என்றார்.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் பணத் தட்டுப்பாடு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தலைமையில் 13 பேர் கொண்ட மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்ததும், தெலுங்கு தேசக் கட்சி பெரிதும் வரவேற்றது.

இதுதொடர்பாக கடந்த அக்டோபர் மாதமே, பிரதமருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியதாகவும், ஆதலால் இந்த முடிவு, தெலுங்கு தேசக் கட்சிக்கு கிடைத்த வெற்றி எனவும் அக்கட்சி தெரிவித்தது.

ஆனால், உயர் மதிப்பு ரூபாய் வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டதால், சந்திரபாபு நாயுடு தனது அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

click me!