டயட் வேண்டாம், எக்சஸைஸ் வேண்டாம்- ஒரு டம்ளர் தண்ணீர் இருந்தால் போதும்..!!

By Dinesh TGFirst Published Dec 6, 2022, 6:48 PM IST
Highlights

தொப்பை மற்றும் கொழுப்பைக் குறைக்கப் பல வழிகளில் போராடுபவர்கள் ஏராளம். ஆனால் ஒரு எளிய வழிமுறைகளை பின்பற்றினால் கொழுப்பை எளிதாக கரைத்துவிடலாம். அதற்கு தண்ணீர் மட்டும் இருந்தால் போதுமானது
 

சிலருக்கு உடனுக்குடன் பசி எடுத்துக் கொண்டே இருக்கும். இதுபோன்ற உணர்வுதான் தான் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில் காலை உணவுக்கு அரைமணி நேரத்துக்கு முன்பு வெறும் 500 மில்லி லிட்டர் தண்ணீரை குடித்தால்,பெரியளவில் பசி உண்டாகாது என்று தெரியவந்தது. அவ்வப்போது பசி ஏற்படும் உணர்வு வெளிப்பட்டால், உடனடியாக ஒரு டம்ளர் குடித்தால் போதும். அந்த பசி உணர்வு போய்விடும் என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

நிறைய தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. தண்ணீர் குடிப்பது இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு, நமது அனைத்து உறுப்புகளையும் சுத்தப்படுத்துகிறது. இதனால் ரத்தத்திலுள்ள கொழுப்பும் அகற்றப்படுகிறது. இதனால் நீரிழவு ஏற்படுவது தடுக்கப்படுகிறது, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகாமலும் இருக்கும். உணவு எளிதில் செரிமானாகும் மற்றும் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். 

அதிகமாக வியர்த்தால் முடி உதிருமா?

உடலில் கலோரிகள் சேர்வது குறையத் துவங்குகிறது. இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் இயக்கம் அனைத்தும் கட்டுப்பாடுடன் இருக்கும். தண்ணீர் குடிப்பதன் காரணமாக வளர்சிதை மாற்றம் அதிகரித்து எடை குறையத் தொடங்கும். எனவே ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாதவிடாய் ஏற்படும் போது யோகா செய்யலாமா?

உடற்பயிற்சி போலவே, வேண்டிய அளவு தண்ணீர் குடிப்பதும் உடல் இயக்கத்துக்கு தேவையான செயல்முறை தான். ஆனால் உங்களுக்கு கட்டுக்கோபான உடல் வேண்டும் என்றால், உடல் பயிற்சி செய்யத்தான் வேண்டும். அதுதவிர வேறு வழியில்லை. தண்ணீரை போதுமான அளவில் குடிப்பதன் மூலம் , உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்கு ஆக்ஸிஜனை சரியான முறையில் விநியோகமாகிறது. இதனால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.

உங்கள் வயது மற்றும் உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு சிறுநீரக பிரச்சனைகள் இருக்கும், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. அதேபோல, வயதானவர்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்லதல்ல. உங்கள் மருத்துவர் அறிவுறுத்தியபடி மட்டுமே தண்ணீர் குடித்து வரவும். 
 

click me!