குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்நாக்ஸ் - ஊட்டசத்து நிறைந்த "கம்பு லட்டு"

By Dinesh TG  |  First Published Dec 6, 2022, 6:37 PM IST

எண்ணில் அடங்கா மருத்துவ நலன்களை வழங்கும் கம்பு வைத்து ருசியான லட்டு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் எப்போதும் ரைட் சாய்ஸ் சிறுதானியம் தான். சிறுதானியங்களில் தினை,வரகு,சாமை,ராகி, கம்பு என்று பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் நம் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை நமக்கு அளிக்கிறது. அந்த வகையில் இன்று நாம் கம்பு வைத்து ஒரு சுவையான லட்டு செய்ய உள்ளோம். 

கம்பை உடல் எடையை குறைக்க விரும்புவோர் தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும். மேலும் நாம் உண்ணும் உணவுகளை மிக விரைவில் செரிமானம் அடைய செய்யும். இது தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ,  பல்வேறு நோய் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

Latest Videos

undefined

எண்ணில் அடங்கா மருத்துவ நலன்களை வழங்கும் கம்பு வைத்து ருசியான லட்டு எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த கம்பு லட்டு சிறிய குழந்தைகள், பள்ளி செல்லும் மாணாக்கர்கள், பணிக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி என்று கூறலாம். 
.
தேவையான பொருட்கள்:

கம்பு மாவு - 2 கப் 
வெல்லம் - 2 கப் 
முந்திரி - 10 
பாதாம் - 10 
பிஸ்தா - 10 
ஏலக்காய் - 10 
தண்ணீர் - தேவையான அளவு
நெய்-தேவையான அளவு

சௌராஷ்ட்ரா ஸ்பெஷல் கத்தரிக்காய் சட்னி!

செய்முறை:

முதலில் கம்பை சுத்தம் செய்து விட்டு, ஒரு கடாயில் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஆற வைத்து விட்டு, ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கம்பு மாவினை சல்லடையில் போட்டு சலித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்து காய்த்து பின் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து ஒரு சுற்று சுற்றி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஏலக்காய்யை சேர்த்து பவுடர் செய்து கொள்ள வேண்டும். 

ஒரு பெரிய கடாயில் கம்பு மாவு போட்டு , ஏலக்காய் பொடியை தூவி நன்றாக கலந்து விட்டு, பின் வெல்ல பாகினை சிறுக சிறுக ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின் சிறிது நெய் சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

இப்போது கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டையினையும் பொடித்து வைத்துள்ள முந்திரி, பாதம், பிஸ்தாகளின் மீது பிரட்டி எடுத்தால் அருமையான கம்பு லட்டு ரெடி!

click me!