மொருமொருப்பான சிக்கன் லாலி பாப்!- வாங்க சமைக்கலாம்!

By Dinesh TG  |  First Published Dec 6, 2022, 3:23 PM IST

வாருங்கள்! மொறுமொறுவான சிக்கன் லாலி பாப்பை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


அசைவ உணவு வகைகளில் ஒன்றான சிக்கன் வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளுக்கும் ஒரு கூட்டமே அடிமையாக இருக்கும். சில்லி சிக்கன், சிக்கன் 65, பட்டர் சிக்கன், சிக்கன் கிரேவி,சிக்கன் தந்தூரி என்று எதை செய்து கொடுத்தாலும் அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். அந்த வகையில் சிக்கன் ரெசிபிகளில் ஒன்றான சிக்கன் லாலிபாப் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும் குறிப்பாக குழந்தைகள் மிகவும் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு உணவு என்றும் கூறலாம். 

வழக்கமாக நம்மில் அதிகமானோர் இந்த சிக்கன் லாலி பாப்பை துரித உணவகங்கள் அல்லது ரெஸ்டாரண்ட்களில் சென்று தான் சுவைத்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று அதனை நமது வீட்டிலேயே சுவையாகவும் எளிமையாகவும் செய்யலாம். இதனை ஃப்ரைட் ரைஸ், பிரியாணி, நூடுல்ஸ் என பல வகையான உணவுகளுக்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சிலர் இதனை மட்டுமே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவார்கள். 

Latest Videos

undefined

வாருங்கள்! மொறுமொறுவான சிக்கன் லாலி பாப்பை வீட்டில் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

சிக்கன் லாலிபாப் பீஸ் -8
 முட்டை-1 
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன் 
கார்ன் பிளார் -5 ஸ்பூன் 
 மைதா மாவு -2 ஸ்பூன் 
சோயா சாஸ்-1 ஸ்பூன் 
லெமன் ஜூஸ் -1/2 பழம் 
தயிர்-50 மில்லி
மிளகுதூள்- 1 ஸ்பூன் 
காஷ்மீர் மிளகாய் தூள் -2 ஸ்பூன் 
ரெட் புட் கலர்-1 சிட்டிகை 
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

'ஃப்ரைடு பரோட்டா'' இனி கடையில் வாங்க வேண்டாம். வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!

செய்முறை :

முதலில் சிக்கனை நன்றாக அலசி விட்டு ஒரு பவுளில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பெரிய விலசமான பௌலில் கார்ன் பிளார்,மைதா, உப்பு மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கெட்டி தயிர், மிளகுத்தூள் மற்றும் காஷ்மீர் மிளகாய் தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றிக் கொண்டு 1பின்ச் புட் கலர் சேர்த்துக் கொண்டு நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். பின் இந்த பௌலில், அலசி வைத்துள்ள சிக்கன் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொண்டு சுமார் 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து , சிறிது எண்ணெயை சிக்கனில் தெளித்து விட்டு ஒரு முறை பிரட்டி கொள்ள வேண்டும். 

இப்போது ஊறிய சிக்கன் லாலி பாப் துண்டுகளை எண்ணெயில் போட்டு, (தீயினை சிம்மில் வைத்து )பொரித்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் சிக்கன் லாலி பாப் ரெடி

click me!