இடுப்பை சுற்றி டயர் போல இருக்கும் கொழுப்பு சதை இவ்வளவு ஆபத்தா?

இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு சதை எவ்வளவு ஆபத்தானது. இதுகுறித்து நிபுணர்கள் சொல்வது என்ன என்று இங்கு பார்க்கலாம்.

Why Fat Around the Waist is Particularly Hazardous in tamil mks

Health Risks of Fat Around the Waist : பொதுவாக இடுப்பு பகுதி பலமாக இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் வயது ஆக ஆக உடம்பின் மற்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து இடுப்பு பகுதியில் வந்துவிடும். அதிலும் குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவு பழக்கத்தால் சிறுவர்கள் உட்பட்ட பெரும்பாலானோருக்கு இடுப்பு பகுதி பெரியதாக தான் உள்ளது. இடுப்பு பகுதியில் குவிந்திருக்கும் கொழுப்புகளை குறைப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு ஆபத்தானது என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதுகுறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

Why Fat Around the Waist is Particularly Hazardous in tamil mks

Latest Videos

இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு ஏன் ஆபத்தானது?

உண்மையில், இடுப்பு சுற்றி இருக்கும் கொழுப்பு பல வகைகளில் நமக்கு ஆபத்தை ஏற்படுத்தும். அதாவது இடுப்பு கொழுப்பு சேர்வதால் இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவேதான் மருத்துவர்கள் இடுப்பு பகுதியில் அதிக அளவு கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இதையும் படிங்க:   இந்த '4' பொருள் போதும்! தண்ணீரில் கலந்து குடிக்கங்க .. கொழுப்பு கரையும்!

நிபுணர்கள் சொல்வது என்ன?

இதுகுறித்து ஸ்வீட நாட்டை சேர்ந்த லூண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், உடல் பருமனால் புற்றுனோய் வரும். அதற்கான காரணங்களை கண்டறிய உடல் எடையை காட்டும் BMI (Body Mass Index) அளவைவிட இடுப்பு அளவு கணக்கிடப்பட்டது. அதில், இடுப்பை சுற்றி சேரும் கொழுப்பு அளவீட்டைக் காட்டிலும் 11 சென்டிமீட்டர் அதிகரித்தாலே 25% வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கண்டறிந்துள்ளன. இது தவிர, BMI அதிகரித்தாலே 19% ஆபத்து ஏற்படும் என்கின்றனர்.

இதையும் படிங்க: காபி கெட்ட 'கொழுப்பை' கரைக்கும் தெரியுமா? பலரும் அறியாத '5' வகை காபி!!!

BMI என்றால் என்ன?

BMI என்பது நம்முடைய உடலில் இருக்கும் கொழுப்பை காண்பிக்காது. ஆனால் இடுப்பை சுற்றி சேரும் கொழுப்பின் அளவை துல்லியமாக காட்டும் அளவீடு என்கின்றனர் நிபுணர்கள். மேலும் இடுப்பில் சேரும் கொழுப்பு தான் எல்லா உடல் நலக் குறைவுக்கும் காரணம் என்கின்றனர்.

பெண்ணிற்கு இடுப்பு அளவு அதிகமாக இருந்தால் என்ன?

ஆய்வின்படி, ஆண் பெண் இருவருக்கும் இடுப்பின் அளவு அதிகமாக இருந்தால் கண்புரை அபாயம் அதிகரிக்கும். முக்கியமாக பெண்ணிற்கு இடுப்பு அளவு அதிகமாக இருந்தால் ரத்த அழுத்த குறைபாடு, இதய நோய் போன்ற நோய்கள் வருவதாக ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, வருங்காலத்தை குறித்த பயமும் வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஆணிற்கு இடுப்பு அளவு அதிகமாக இருந்தால் என்ன?

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஆண்களின் இடுப்பு அளவு 37 அங்குலத்திற்கும் குறைவாக இருந்தால் அவர்களுக்கு புற்றுநோய், இரைப்பை புற்றுநோய் வர 11% வாய்ப்பு உள்ளது. "எல்லா வயதினரும் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்தால் பல லட்சக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்த முடியும்" என்று அமெரிக்கா ஜான் ஹைப்பிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இடுப்பு அளவை எப்படி அறிந்து கொள்வது?

இடுப்பு சுற்றளவை உங்களது உயரத்தை வைத்து அளந்து கொள்ளலாம். உங்களது உயரத்தில் இருந்து இடுப்பு சுற்றளவை கழிக்க வேண்டும். உங்களது இடுப்பு சுற்றளவு 38 அங்குலம் இருந்தால் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்றும், 36 அங்குலம் அல்லது அதற்கு கீழே இருந்தால் நீங்கள் பருமனாக இருக்கிறீர்கள் என்றும் அர்த்தம். இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறினார்.

இடுப்பு அளவு அதிகரிப்பதற்கான காரணங்கள்:

- ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு சதை அதிகரிக்கும். அதுவும் குறிப்பாக, தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும் என்கின்றனர் கலிபோர்னியா ஆராய்ச்சியாளர்கள். இந்த பிரச்சினையை தவிர இருக்க ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சுமார் 2 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்கின்றனர்.

- மோசமான உணவு பழக்க வழக்கத்தால் உங்கள் இடுப்பு பெரியதாக மாறும் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டால் இருப்பு சதையை குறைத்து விடலாம். இதற்கு உங்களது உணவில் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் ஹாலி விதை போன்றவற்றில் காணப்படும் தரைக்குடைய நார்ச்சத்து கொழுப்பை சுலபமாக குறைத்து விடும். மேலும்  உங்கள் உடலில் கலோரிகளை எரிக்கும். பிறகு காலப்போக்கில் இடுப்பு மெல்லியதாக மாறிவிடும். முக்கியமாக அதிக நார்ச்சத்துள்ள முழு தானியங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- இது தவிர பழங்கள் காய்கறிகளையும் அதிகமாக சேர்க்க வேண்டும். மேலும் விதைகள் நட்ஸ்கள் பருப்பு வகைகள் சிற்றுண்டியாக சாப்பிடுங்கள். உடலில் இருக்கும் நார்ச்சத்தை திறம்பட செயல்படுத்த நிறைய தண்ணீர் குடியுங்கள். இதனுடன் நன்றாக தூங்குங்கள்.

vuukle one pixel image
click me!