உடல் உறுப்புகளில் தெரியும் அறிகுறிகளை வைத்தே என்ன நோய் என்பதை கண்டறிய முடியும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
Why Do Signs On Organs Matter : நமது உடல் என்பது திசுக்களால் ஆனா உறுப்பு மண்டலங்களால் ஆனது. ஒவ்வொரு உறுப்புக்கும் உடலில் தொடர்புள்ளதால், உடலில் எந்த மாற்றங்கள் வந்தாலும் அதற்கேற்ப கண், காது, வாய், கால், பாதம் என உறுப்புகளில் அதன் அறிகுறிகள் தென்படும். இந்த பதிவில் உறுப்புகளில் வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகளை கொண்டு நோயை அறிவது குறித்தும், அதற்கான தீர்வுகளையும் காணலாம்.
கண்களில் வீக்கம்;
உங்களுடைய கண்கள் வீங்கியது போல உப்பிய தோற்றமளித்தால் சிறுநீரகங்களில் பிரச்சனை என அர்த்தம். சிறுநீரகங்கள் நன்றாக இயங்காமல் இருக்கும் போது தான் கண்கள் உப்பியது போல காட்சியளிக்கும். இதை தவிர்க்க உங்களுடைய உணவில் உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது உதவியாக இருக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்கள் நன்றாக இயங்கி கண்களின் வீக்கம் குறையும்.
கண் இமைகளில் பிரச்சனை;
சிலருக்கு கண் இமைகளில் வலி ஏற்படலாம். இது கண்களுக்கு ஓய்வு தேவை என்பதன் அறிகுறியாகும். உடலில் மெக்னீசியம் தாது குறைவதால் சோர்வினாலும் வலி ஏற்படும். நல்ல ஓய்வும், உணவில் முட்டைக்கோஸ், கீரைகளை போன்ற இலை வகை காய்கறிகளை எடுத்து கொள்வதும் நல்லது.
கண்களில் வெளிச்சம் தெரியுமா?
கண்கள் அதிகமாக ஓய்வின்றி உழைக்கும்போது இந்த பிரச்சனை வரலாம். அதாவது திடீரென அதிக வெளிச்சத்தை காண்பது போல இருக்கும். வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் மூளை குழப்பம் அடைந்து தவறான தகவல்களை கண்களுக்கு கொடுப்பதால் திடீரென அதிகமான வெளிச்சமும், புள்ளிகளும் கண்களுக்கு தெரியும். இதை சரி செய்ய போதுமான அளவு ஓய்வெடுக்க வேண்டும். இரவு அவசியம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். காபி குடிப்பதை தவிருங்கள்.
இதையும் படிங்க: 'ஓ' ரத்தப்பிரிவினர் அதே ரத்த வகை கொண்டவர்களை 'திருமணம்' செய்யலாமா? அறிவியல் உண்மை!!
கண்களுக்கு பயிற்சி:
கண்களை மேலும், கீழும், பக்கவாட்டில் இருபக்கமும் அசைப்பது நல்லது. இதை செய்வதால் கண்கள் நன்கு இயங்கி அவற்றிற்கு வறட்சி இல்லாமல் இருக்கும்.
முகம் வீக்கினால்..
உடலில் நிரீழிப்பு ஏற்பட்டால் முகம் வீங்கி காணப்படும். இதை சரி செய்ய தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் ரத்த செல்கள் விரிவடையும். இதனால் தான் முகம் வீங்குகிறது. குறைந்தது 7 முதல் 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
இதையும் படிங்க: உடம்புல 'இந்த' அறிகுறிகள் வந்தால் பித்தம்னு அர்த்தம்.. ஈஸியா குறைப்பது எப்படி?
இளம் மஞ்சள் சருமம்:
கல்லீரல் நோய் இருந்தால் சருமம் மஞ்சள் நிறமாக மாற வாய்ப்பாக அமையும். கல்லீரால் கழிவுகளை வெளியேற்ற முடியாதபட்சத்தில் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதுவே கல்லீரலை மோசமாக பாதிக்கும். குடிப்பழக்கத்தை நிறுத்துசது நல்லது.
பாதம், கை, கால்களில் குறுகுறுவென ஓடும் உணர்வு:
சீராக ரத்த ஓட்டம் இல்லாமல் இருக்கும்போது இந்த பிரச்சனை வருகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளவர்களுக்கு உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. நடைபயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். காய்கறிகள், முட்டை, கீரைகள், இறைச்சி போன்ற சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
பாதம் மரத்துப் போதல்:
நீரிழிவு நோய் இருப்பதால் இந்த அறிகுறி ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கால்களில் செருப்பு போடுவது கூட உணர்வை ஏற்படாது. உராய்வோ, எரிச்சலோ ஏற்படாது. தினமும் நடைபயிற்சி செய்வது, உணவு கட்டுப்பாடு, நல்ல தூக்கம், இனிப்பு உணவுகளை தவிர்த்தல் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
பாதங்களில் வெடிப்பு:
தைராய்டு ஹார்மோன் பிரச்சனையால் பாத வெடிப்பு ஏற்படும். பாதவெடிப்புடன், உடல் எடை அதிகமாதல் அல்லது குறைதல் போன்ற அறிகுறி தென்பட்டால் ரத்த பரிசோதனையில் தைராய்டு சோதனை செய்து மருத்துவரை ஆலோசியுங்கள்.
சிவந்த உள்ளங்கை:
கல்லீரல் பிரச்சனை இருந்தால் உள்ளங்கை சிவக்கும். இதை சரி செய்ய கீழாநெல்லியை வாரத்தில் ஒரு முறை உண்ணலாம். மருத்துவரிடம் சென்று கல்லீரலை பரிசோதித்து அறிய வேண்டும்.
வெளுத்த நகங்கள்;
இரத்த சோகை இருந்தால் தான் இந்த அறிகுறி வரும். இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைந்தால் உடல் பலவீனமாகும். இதை சரி செய்ய ஈரல், கீரைகள், இறைச்சியை சாப்பிட்டாலாம். இரும்புச்சத்து குறைபாட்டை சரி செய்ய மருத்துவர் ஆலோசனை பெறலாம்.
விரல் முட்டிகளில் வலி:
ஆர்த்தரடீஸ் என்ற மூட்டுவலி பிரச்சனை வந்தால் விரல் முட்டிகளில் வீக்கமும், வலியும் வரக் கூடும். இது வயதானவர்களை மட்டுமின்றி அனைத்து வயதினரையும் தாக்கலாம். கால்சியம், வைட்டமின் டி போன்ற சத்துகளை எடுத்து கொள்ள வேண்டும். ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி உள்ள பழங்களை உண்ணலாம். மூட்டு வலி குறைய உடற்பயேசி செய்யலாம். உடல்பருமனைக் குறைத்தாலும் மூட்டு வலி வராமல் தடுக்க முடியும்.
நகங்களில் குழி:
சோரியாஸிஸ் இருந்தால் தோலும், நகங்களும் மென்மையாக மாறிவிடும். இதனால் நகங்களில் குழிகள் வர வாய்ப்பாக அமையும். மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
வாய்ஈறுகளில் இரத்தம் வந்தால்..
பல் ஈறுகள் தொடர்பான நோய் இருந்தால் ஈறுகளில் ரத்தம் வடியும். ஈறுகளிலும், அதன் கீழ் உள்ள எலும்புகளிலும் தொற்று இருந்தால் பற்கள் வலு இழந்து ரத்தம் வரும். பல் துலக்கும்போதே ஈறுகளில் ரத்தம் வடிந்தால் இந்த இருக்கிறது.