உங்களுக்கு பயங்கரமான கனவுகள் ஏன் வருது தெரியுமா? இந்த சம்பவம் உங்களுக்கு நடந்திருக்கலாம்!!

By Ma riyaFirst Published Jun 7, 2023, 1:44 PM IST
Highlights

பயங்கரமான கனவுகள் ஏன் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், கனவுகள் ஏன் வருகின்றன என்பதை அறிந்து கொள்வது அவசியம். வாங்க பார்க்கலாம். 

கனவுகள் நம்முடைய ஆழ்மன சிந்தனைகள் என்றொரு கூற்றும் உண்டு. வெறும் கனவுகளால் நாம் பாதிப்படைவதில்லை. நாம் நினைப்பதற்கு எதிர்மாறான விஷயங்களை கனவில் காணும்போது தான் நாம் அதிர்ச்சியுறுகிறோம். அதையே பயங்கரமான அல்லது கெட்ட கனவுகள் என்கிறோம். இதனால் சில நேரங்களில் மக்களின் தூக்கமும் பாதிக்கப்படும். ஆனால் அத்தகைய கனவுகள் ஏன் வருகின்றன? நம் மூளையில் உள்ள ரசாயனங்களின் சமநிலையின்மை அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

பயங்கரமான கனவுகள் ஏன் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், கனவுகள் ஏன் வருகின்றன என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். இது குறித்து நிபுணர்கள் சொல்லும்போது, கனவுகள் நம் மனதில் எண்ணங்கள் மற்றும் அன்றைய நிகழ்வுகளை செயல்படுத்த உதவுகின்றன. உதாரணமாக, கனவுகள் மூளையின் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். இது உங்கள் உணர்ச்சிகளின் மன செயலாக்கம் மற்றும் உங்கள் நினைவுகளை ஒருங்கிணைப்பதாகும். இதுவே மூளையின் இயல்பான செயல். நாம் நினைவில் அசைபோடும் அல்லது அச்சப்படும் விஷயங்கள் கனவில் வருகின்றன. இப்போது பயமுறுத்தும் கனவுகள் வருவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். 

பயங்கரமான கனவுகள் ஏன் வருகின்றன? 

சாதரண கனவாக இருந்தாலும் சரி, பயங்கரமான கனவாக இருந்தாலும் சரி, அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் இன்னும் மர்மமாகவே இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இன்னும் அதற்கு சரியான காரணம் புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் மூளை குறித்து செய்யப்பட்ட ஆய்வுகள் கனவுகள் ஏற்படுத்தும் பல விஷயங்களைக் கொண்டு வந்துள்ளன. இதற்கு மிகவும் பொதுவான காரணம் அன்றாட வாழ்க்கையின் மன அழுத்தமாகவும் இருக்கலாம். 

பள்ளி அல்லது வேலையைக் குறித்து கவலைப்படுபவர்களுக்கு மற்றவர்களை விட கனவுகள் அதிகம். இது தவிர, சில முக்கிய வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது நேசிப்பவரின் மரணம் போன்ற வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் கூட கனவுகளை ஏற்படுத்தும். விரைவான கண் இயக்கம் (REM) என்பது தூக்கத்தின் ஒரு கட்டமாகும். இதில் விரைவான கண் அசைவுகள், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், அதிகரித்த சுவாச விகிதங்கள்ஏற்படுகிறது. 

ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் ஆர்.ஈ.எம் ( REM) தூக்கம் நீடித்திருக்கும் போது கனவுகள் ஏற்படுவதாக தெரிவித்தனர். இது தவிர, மன அழுத்தம், பதட்டம், ஒழுங்கற்ற தூக்கம், போதைப்பொருள் நுகர்வு, மனநலக் கோளாறுகள் போன்ற பல காரணங்களால் கனவுகள் எழலாம். ஆனால் பயங்கரமான கனவுகளுக்கு முக்கியமான காரணம் பிடிஎஸ்டி (Post-traumatic stress disorder) என்ற அதீத மன உளைச்சல் டிஸார்டர் தான். 

பிடிஎஸ்டி என்ன செய்யும்? 

உடல்ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது விபத்து போன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகளுக்குப் பிறகு ஏற்படும் பயங்கரமான கனவுகள் பொதுவானவை. இவர்கள் அதீத மன உளைச்சல் டிஸார்டர் பாதித்தவர்கள். இது ஒருவரின் மன ஆரோக்கியத்தை சார்ந்துள்ளது. பை போலார் டிஸ்சாடர், மனச்சோர்வு அல்லது ஸ்கிசோஃப்ரினியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் கனவுகளுக்கு ஆளாகிறார்கள்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள், சிகிச்சை மூலம் பயங்கரமான கனவுகளின் அபாயத்தைக் குறைக்கமுடியும். இதற்கு மனநல மருத்துவர்கள் உங்களுக்கு உதவலாம். மகிழ்ச்சியான மனநிலை, அமைதியான குடும்ப சூழல் உங்களை அதீத மன உளைச்சல் டிஸார்டரில் இருந்து மீட்டெடுக்க தேவை. 

இதையும் படிங்க: இறந்தவர்கள் உங்க கனவில் வந்தால் இத்தனை அர்த்தங்கள் இருக்குது தெரியுமா? 17 கனவுகளின் விளக்கம்!!

click me!