Healthy Rice: எந்த அரிசியை சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது? ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம் இதோ!

By Dinesh TG  |  First Published Feb 3, 2023, 8:57 PM IST

உலகில் அதிகம் பேரால் உண்ணப்படும் தானியம் அரிசி தான். அரிசியில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அரிசியில் பல ரகங்கள் உள்ளது. ஒவ்வொரு ரகமும் தனித்தனியான குணங்களைப் பெற்றுள்ளது. அவ்வகையில், எந்த அரிசி நமக்கு நல்லது என ஊட்டச்சத்து நிபணர் கரிமா கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
 


வெள்ளை அரிசி

உலகம் முழுவதும் மிக அதிகமாக சாப்பிடப்படுவது வெள்ளை அரிசி தான். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், ‘மற்ற அரிசி வகைகளை ஒப்பிடுகையில், வெள்ளை அரிசியில் மாவுச்சத்து மிக மிக அதிகமாக உள்ளது. குறைந்த அளவிலான கலோரி கொண்ட உணவை உண்ண வேண்டும் எனும் விருப்பம் கொண்டவர்கள், இதனை கவனத்துடன் எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை அரிசியின் தோற்றமானது, பாலிஷ் செய்யப்பட்டதை போன்று இருக்கும். இதில் நார்ச்சத்து குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Latest Videos

undefined

பிரவுண் அரிசி

வெளிப்புறத்தில் உள்ள தவிடு லேயர் மட்டுமே இதில் நீக்கப்பட்டு இருக்கும். உட்புறத்தில் உள்ள பிரான் மற்றும் ஜெர்ம் போன்ற லேயர்கள் அப்படியே இருக்கும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் கூறுகையில், பிரௌன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டதைப் போன்று இருக்காது. இதில் வைட்டமின்கள் பி6, மெக்னீசியம், செலீனியம், தியமைன் மற்றும் நியசின் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளது. இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

சிவப்பு அரிசி

சிவப்பு அரிசியை ஹிமாலயன் அரிசி அல்லது பூட்டான் அரிசி என்று அழைக்கலாம். இந்த அரிசி உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு போன்றவற்றை கட்டுப்படுத்தி, எலும்புகளை பலப்படுத்தக் கூடியது என ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் கூறினார். இரும்புச்சத்து அதிகம் நிறைந்த இந்த சிவப்பு அரிசி, உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்றும் அவர் கூறினார்.

Papaya Salad: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பப்பாளி சாலட்: எப்படி செய்வது?

கருப்பு அரிசி

கருப்பு அரிசியில் மண் வாசனை நிரம்பி இருக்கும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் கூறுகையில், “கருப்பு அரிசியில் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் போன்றவை அதிகமாக இருக்கும். இதில் வைட்டமின் இ மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுவதால் தான் இது கருப்பு நிறத்தில் உள்ளது. இருப்பதிலேயே மிக அதிகளவில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது தான் கருப்பு அரிசி. மற்ற எல்லா அரிசிகளை விடவும் இது மிகவும் ஆரோக்கியமானது.

click me!