
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, கருப்பு நிறப் பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அவசியம். ஒவ்வொரு காலநிலையிலும் கிடைக்கும் பழங்கள், நம் உடலில் இருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது. அவ்கையில் 7 விதமான கருப்பு நிற பழங்களை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி, உயர் சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் இதய நோய்களைத் தடுப்எபது வரை, இந்த கருமை நிறப் பழங்கள் உதவியாக இருக்கும்.
பிளாக் ஜாமூன்
பிளாக் ஜாமூன் பழம் பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அதன் நன்மைகள் அளப்பரியது. அதிலும் குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் ப்ளாக் ஜாமுன் பழம் சாப்பிட மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவி புரிகிறது. இப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதம், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு, பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
பிளாக் பெர்ரி
பிளாக் பெர்ரி பழத்தில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் சி மற்றும் கே அதிகளவில் உள்ளது. மேலும், மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் மாங்கனீசு மற்றும் நார்ச்சத்தும் இப்பழத்தில் நிறைந்துள்ளது. பிளாக் பெர்ரி, இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும் உதவி புரிகிறது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவும் சீராக இயங்க உதவுகிறது.
கருப்பு அத்திப்பழம்
கருப்பு அத்திப்பழம் சுவையாக இருப்பது மட்டுமன்றி, அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வயிறு சம்பந்தமான நோய்களுக்கு கருப்பு அத்திப்பழம் மிகவும் நல்லது. குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக செரிமானமும் மேம்படுகிறது. மேலும், கருப்பு அத்திப்பழம் அதிக நார்ச்சத்து நிறைந்த பழமாதலால், எடை குறைப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
கருப்பு திராட்சை
எளிதில் கிடைக்கும் கருப்பு திராட்சையை சாப்பிடுவது, தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஈ, சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இதில் ரெஸ்வெராட்ரோல் எனும் சத்து அதிகமாக உள்ளது. இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள செல்களை சேதமடையாமல் தடுக்கிறது. கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முதுமையை தள்ளிப் போட முடியும்.
கருப்பு மல்பெரி
கருப்பு மல்பெரி பழத்தை சாப்பிட்டால் இரத்த சர்க்கரையை குறைக்க முடியும். மலச்சிக்கல், மாதவிடாய் அறிகுறிகள் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளுக்கு கருப்பு மல்பெரி தீர்வாக இருக்கும்.
Kidney Problems: வேலை இழப்பால் சிறுநீரகப் பிரச்சனைகள் அதிகரிக்கிறதா? எச்சரிக்கும் நிபுணர்!
கருப்பு உலர் திராட்சை
உலர்ப் பழங்களின் பட்டியலில் கருப்பு திராட்சைக்குத் தான் முதலிடம். இந்த உலர் கருப்பு திராட்சையை சாப்பிடுவது, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவி புரிகிறது. இரத்த சோகை இருந்தாலும், நீங்கள் கருப்பு திராட்சை சாப்பிட்டால் உடனடியாக பலன் கிடைக்கும். இப்பழம் ஆஸ்டியோபோரோசிஸில் நன்மை செய்வது மட்டுமின்றி, முடி உதிர்தலையும், முடி நரைப்பதையும் தடுக்கிறது.
கருப்பு செர்ரி
கருப்பு செர்ரியை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்களைத் தடுக்க உதவுகிறது. கருப்பு செர்ரி கீல்வாதம் பிரச்சனைக்கு நன்மை அளிக்கிறது. கருப்பு செர்ரி செரிமானத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.