கோடீஸ்வரா இருந்தாலும் மனைவியை பிரிந்தால் சமைக்கணும்ல.. சப்பாத்தி உருட்டும்போது திணறிய பில்கேட்ஸ்!

By Ma Riya  |  First Published Feb 3, 2023, 5:26 PM IST

கோடீஸ்வரரான பில்கெட்ஸ் சப்பாத்தி தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. 


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸை அறியாதவர்கள் சொற்பம்.  உலக கோடீஸ்வரகளில் ஒருவரான பில்கேட்ஸ், பல இளைஞர்காளுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார். இவர் ரொட்டி தயாரிக்கும் வீடியோ தற்போது கவனம் ஈர்த்துள்ளது. 

சப்பாத்தி தயாரித்த பில்கேட்ஸ்

Tap to resize

Latest Videos

கோடீஸ்வரரான பில்கெட்ஸ் வீட்டில் தயார் செய்யும் உணவுகளை தான் அதிகம் விரும்புகிறார். பில்கெட்ஸ் பாத்திரம் துலக்குவதை கூட விரும்பி செய்வார் என கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல செஃப் எய்டன் பெர்நாத்துடன் இணைந்து பில்கேட்ஸ் சப்பாத்தி தயாரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது. இதில் சப்பாத்திக்கு எப்படி மாவு பிசைவது என எய்டன் சொல்லிக் கொடுக்க பில்கேட்ஸ் பொறுமையாக உணவு தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். 

திணறிய பில்கேட்ஸ் 

எய்டன் அண்மையில் இந்தியா வந்ததாகவும், அப்போது தான் ரொட்டி செய்வது குறித்து கற்று கொண்டதாகவும் பில்கேட்ஸிடம் தெரிவிக்கிறார். அதை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த பில்கேட்ஸ் தன்னுடைய சமையல் அனுபவம் குறித்து புன்னகையுடன் பகிர்கிறார். அவர் சமையல் செய்து ரொம்ப காலம் ஆகிவிட்டதாம். தினமும் சூப் சுட வைத்து அருந்துவதாக தெரிவித்த பில்கேட்ஸுக்கு, சப்பாத்தி செய்வது சுலபமாக கைகூடவில்லை. 

மாவை சப்பாத்தி கட்டையால் தேய்க்கும்போது திணறிவிட்டார். செஃப் எய்டனும், பில்கேட்ஸும் எடுத்து வெளியிட்ட இரண்டாவது வீடியோ இதுவாகும். இந்த வீடியோவில் இந்திய உணவுகளை விரும்புவதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி சுமார் எட்டு மணி நேரத்திற்குள்ளாகவே 5 லட்சம் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது.  

 

. and I had a blast making Indian Roti together. I just got back from Bihar, India where I met wheat farmers whose yields have been increased thanks to new early sowing technologies and women from "Didi Ki Rasoi" canteens who shared their expertise in making Roti. pic.twitter.com/CAb86CgjR3

— Eitan Bernath (@EitanBernath)

பில்கேட்ஸ் சொத்து மதிப்பு

உலகின் நான்காவது பணக்காரராக திகழும் பில்கேட்ஸ் 115 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதி. இவர் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையை நடத்திவருகிறார். தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுவதில் இந்த அறக்கட்டளை அதிக கவனம் செலுத்துகிறது. மலேரியாவை ஒழிப்பது முதன்மையான நோக்கம். சுமார் 30 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த பில்கேட்ஸ், மெலிண்டா தம்பதியினர் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: முருங்கை கீரையை இப்படி சாப்பிட்டால் போதும்.. சில நோய்க்கு மாத்திரையே போட வேண்டாம் தெரியுமா?

இதையும் படிங்க: ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டி டார்ச்சர் செய்த சல்மான் கான்... உலக அழகி சந்தித்த பிரச்சனைகள் இவ்வளவா?

click me!