இந்த வார சண்டேக்கு ஆந்திரா ஸ்டைலில் ஸ்பைசி மட்டன் குழம்பு வைத்து சாப்பிடுங்க!

By Dinesh TG  |  First Published Feb 3, 2023, 10:41 AM IST

வாருங்கள்! ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மட்டன் குழம்பை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று பெரும்பாலான அசைவ பிரியர்கள் மட்டன் தான் அதிகமாக சமைப்பார்கள். இந்த முறை மட்டன் வைத்து ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மட்டன் குழம்பு செய்து சாப்பிடலாமா?

வாருங்கள்! ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான மட்டன் குழம்பை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

ஊற வைப்பதற்கு:

  • மட்டன் - 1/2 கிலோ
  • மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

Latest Videos

undefined


அரைப்பதற்கு :

  • வெங்காயம் - 1
  • துருவிய தேங்காய் - 1 கப்
  • தண்ணீர் - தேவையான அளவு


மற்ற பொருட்கள்:

  • வெங்காயம்- 1
  • தக்காளி - 1/2 கப்
  • மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  • மல்லித் தூள் - 1 ஸ்பூன்
  • கரம் மசாலா - 1 ஸ்பூன்
  • கஸ்தூரி மேத்தி-1 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

 

Valentine’s Special : வேலன்டைன்ஸ் ஸ்பெஷல்- "ஃப்ரூட் ஃபலூடா" செய்து அன்பை பரிமாறலாமா!

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தம் செய்து நன்றாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது அலசிய மட்டனில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக பிரட்டி சுமார் 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். அடுப்பில் 1 குக்கர் வைத்து அதில் ஊறிய மட்டனை சேர்த்து ஊற்றி குக்கரை மூடி சுமார் 6 முதல் 7 விசில் வரை வேக விட்டு இறக்கி விட வேண்டும்.வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பிறகு, அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு பின் அதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும். பின் கடாயில் மட்டனை வேக வைத்துள்ள தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் மல்லித் தூள்,மிளகாய் தூள்,கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின் 2 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி ,சுமார் 10 நிமிடங்கள் வரை மூடி விட்டு கொதிக்க வைக்க வேண்டும் .கலவை கொதித்து கெட்டியாக மாறிய பிறகு, கஸ்தூரி மேத்தி மற்றும் மல்லித்தழையை தூவி இறக்கினால் டேஸ்ட்டான ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு ரெடி!

click me!