Valentine’s Special : வேலன்டைன்ஸ் ஸ்பெஷல்- "ஃப்ரூட் ஃபலூடா" செய்து அன்பை பரிமாறலாமா!

By Dinesh TG  |  First Published Feb 2, 2023, 5:15 PM IST

வாருங்கள்! சில்லென்ற ஃப்ரூட் ஃபலூடா ரெசிபியை சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் வந்தவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினம் தான். காதலிக்கும் இளைஞர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலை பல்வேறு வித பரிசுகள் கொடுத்து தெரிவிப்பார்கள் இதனை கல்லூரி அல்லது பணிக்கு செல்லும் காதலர்கள் மட்டுமல்லாது திருமணமான தம்பதி காதலர்களாலும் கொண்டாடப்படுகின்றது.

திருமணமான தம்பதிகள் பல்வேறு பரிசுகளை மட்டும் கொடுக்காமல் சில ரெசிபிக்களை நாம் செய்து கொடுத்து தங்கள் அன்பை பரிமாறலாம்.அந்த விதத்தில் இன்று நாம் சூப்பரான சில்லென்ற ஃப்ரூட் ஃபலூடா ரெசிபியை செய்து உங்கள் அன்புக்குரியவருக்கு உங்கள் கைகளால் செய்து கொடுத்து அசத்தலாம். 

Tap to resize

Latest Videos

வாருங்கள்! சில்லென்ற ஃப்ரூட் ஃபலூடா ரெசிபியை சுலபமாக வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்

பலுடா சேவை- 4 ஸ்பூன் 
ஆப்பிள் - 1 ஸ்பூன் 
மாதுளை- 2 ஸ்பூன் 
கிவி - 1 ஸ்பூன் 
செர்ரி-2 ஸ்பூன் 
சப்ஜா விதை- 1 ஸ்பூன் 
ஜெல்லி துண்டுகள்-1/4 கப்
பால்-1/4 கப்
கண்டென்ஸ்ட் மில்க்-4 ஸ்பூன் 
நட்ஸ்- 2 ஸ்பூன் 
ரோஸ் சிரப்-3 ஸ்பூன் 
வெண்ணிலா ஐஸ்க்ரீம்-1/4 கப்
சாக்லேட் சிப்ஸ்- தேவையான அளவு 

இனி வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பாலை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பால் நன்றாக காய்ந்து பாதி அளவாக சுண்டி வரும் பொழுது கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து திக்கான ரபடி பதத்தில் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். 

ஆப்பிள், கிவி, செர்ரி போன்ற பழங்களை ஒரே மாதிரியான சிறிய அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாதுளையை தோல் உரித்து விதைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்கும் தண்ணீரில் பலுடா சேவை (சேமியாவை) சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொண்டு அதனை குளிர்ந்த தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு சின்ன பௌலில் சப்ஜா விதைகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். ஒரு பெரிய க்ளாஸ் டம்ளரில் முதலில் சிறிது ரோஸ் சிரப் ஊற்ற வேண்டும். பின் அதில் ஊறிய சப்ஜா விதைகளை சிறிது சேர்க்க வேண்டும். பின் அதில் வெந்த பலுடா சேவையை சேர்க்க வேண்டும். 

அடுத்த படியாக ஆப்பிள், செர்ரி, கிவி மற்றும் மாதுளை ஆகிய பழத்துண்டுகளை கொஞ்சம் தூவ வேண்டும்.அடுத்ததாக அதில் ஜெல்லி துண்டுகளை சேர்க்க வேண்டும்.  பின் அதில் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து அதன் மேல் சில சப்ஜா விதைகள், பழத்துண்டுகள் மற்றும் ஜெல்லி சேர்க்க வேண்டும். இறுதியாக அதன் மேல் சாக்லேட் சிப்ஸ் தூவி பரிமாறினாள் சில்லென்ற ஃப்ரூட் ஃபலூடா ரெடி!

click me!