வாருங்கள்! தித்திக்கும் சுவையில் கமர்கட் மிட்டாய் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய நவீன உலகத்தில் என்ன தான் புது விதமான மிட்டாய்கள், சாக்லேட்கள் வந்தாலும் 90"ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட மிட்டாய்களான கமர்க்கட், தேன் மிட்டாய், தேங்காய் மிட்டாய் போன்றவைகளின் சுவைகளுக்கு ஈடு ஆகவே ஆகாது.
அந்த வகையில் தேங்காய் மற்றும் வெல்ல பாகு வைத்து செய்யப்படும் மிட்டாய் வகையான கமர்கட் ரெசிபியை இன்று நாம் காண உள்ளோம். இந்த கமர்க்கட் மிட்டாயை 90'ஸ் கிட்ஸ்கள் மட்டுமல்லாது இன்றைய குழந்தைகளும் , வயதானவர்களும் விரும்பி சாப்பிடுகின்ற சுவையில் இருக்கும்.
undefined
மேலும் இதனை ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி செய்து தரும்படி உங்களை வற்புறத்துவார்கள் உங்கள் வீட்டு செல்லக் குழந்தைகள். இந்த கமர்க்கட் ரெசிபியை வீட்டில் இருக்கும் 2 பொருட்களை வைத்து மிக குறைந்த நேரத்தில் எளிதில் செய்து விடலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 1 வாரம் வரைக் கூட வைத்து சாப்பிடலாம்.
வாருங்கள்! தித்திக்கும் சுவையில் கமர்கட் மிட்டாய் ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல்- 2 கப்
வெல்லம்-1/2 கப்
நெய் - சிறிது
இனி வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்!
செய்முறை:
முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று வெல்லத்தையும் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமாக சூடு செய்ய வேண்டும்.
வெல்லம் தண்ணீரில் கரைந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். அதனை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் வெல்லக் கரைசல் உள்ள பாத்திரத்தை வைத்து அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கிட்ட தட்ட 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு அக்கலவையை கையில் கொஞ்சம் எடுத்து (சூடு ஆறிய பிறகு )கையில் உருட்டி பார்க்க வேண்டும். கையில் உருட்ட வந்தால் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். (இல்லையென்றால் மேலும் சில நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.)
பின் கையில் சிறிது நெய் தடவி கொண்டு , கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது ஒரே அளவிலான சிறிய வட்ட வடிவத்தில் உருட்டிக் கொள்ள வேண்டும். ஆறிய பிறகு இதனை சுவைத்தால் சூப்பராக இருக்கும். அவ்ளோதான் தித்திப்பான கமர்கட் ரெடி!