இனி வீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்!

By Dinesh TGFirst Published Feb 2, 2023, 1:11 PM IST
Highlights

வாருங்கள்! சுவையான மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக ஜாம் போன்றவற்றை நாம் வெளியில் கடைகளில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். அதனையே நாம் வீட்டில் செய்தால் நமக்கு பிடித்த பழங்களை வைத்து சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செய்யலாம். மேலும் ஒரு தடவை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் இதனை உபயோகிக்கலாம். இதனை பிரட் அண்ட் சப்பாத்தி போன்றவற்றில் வைத்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 

வாருங்கள்! சுவையான மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

ஆப்பிள் - 3 
பப்பாளி - 1/2 
திராட்சை - 1/2 கிலோ 
வாழைப்பழம் - 1
ஸ்ட்ராபெர்ரி - 4 
அன்னாசி - 1/2 
லெமன் ஜூஸ் - 1 1/2 ஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் – 6 ஸ்பூன் 
சர்க்கரை - 1/2 கிலோ 
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் பப்பாளி மற்றும் அன்னாசி பழங்களின் தோலை சீவி விட்டு ஒரே அளவிலான சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஆப்பிள் பழத்தை தோல் சீவாமல் ஒரே மாதிரியான சிறு அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். திராட்சையில் இருக்கும் விதைகளை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 

குழந்தைகளுக்கு சத்தான கீரை காரப் பொங்கல் இப்படி செய்து கொடுங்கள்!

அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் அரிந்து வைத்துள்ள ஆப்பிள் அன்னாசி மற்றும் பப்பாளி ஆகிய பழங்களை சேர்த்து சிறகு தண்ணீர் சேர்த்து வேக வைத்து, இறக்கி விட வேண்டும். பழங்கள் ஆறிய பிறகு, ஆப்பிளின் தோலினை நீக்கி விட வேண்டும். 

இப்போது மிக்ஸி/பிளெண்டரில் வேக வைத்து எடுத்துள்ள ஆப்பிள், அன்னாசி, பப்பாளி, விதை நீக்கிய திராட்சை, லெமன் ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு அகன்ற வாணலி வைத்து அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து அதனுடன் சர்க்கரை மற்றும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக மாறும் வரை அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

கலவை நிறம் மாறி கொஞ்சம் கெட்டியாக மாறிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இதனை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் மாற்றிக் கொண்டு அறை நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை பிரிட்ஜில் வைத்து குளிர வைத்தால் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் ரெடி!

click me!