வாருங்கள்! ஆரோக்கியமான பிரண்டை தோசையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காலை உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வதால் அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமவும் இருக்க முடியும்.அப்படி ஆரோக்கிய நலனையும் மருத்துவ குணமும் கொண்ட பிரண்டை வைத்து இன்று நாம் ஒரு ரெசிபியை கான் உள்ளோம். பிரண்டை வைத்து துவையல், பொடி, சட்னி, ஊறுகாய் போன்றவற்றை தான் நம்மில் அதிகமானோர் செய்து சாப்பிட்டு இருப்போம். அந்த வகையில் இன்று நாம் பிரண்டை வைத்து சூப்பரான தோசை ரெசிபியை பார்க்க உள்ளோம்.இந்த பிரண்டை தோசைக்கு தேங்காய் அல்லது தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
வாருங்கள்! ஆரோக்கியமான பிரண்டை தோசையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் "சாக்லேட் சாண்ட்விச்"
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, இட்லி அரிசி ,உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து அலசி விட்டு பின் அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து பிரண்டையை சுத்தம் செய்து அலசிக் வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பிரண்டையின் இலைகளை எடுத்து விட்டு, பின் முனைகளை சிறிய துண்டுகளாக உடைத்துக் கொள்ள வேண்டும். (அரிப்பை தவிர்க்க எண்ணெய் தேய்த்துக் கொள்ளவும் அல்லது கையுறை அனைத்து கொள்ளவும்.)
பின் காம்புகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது கிரைண்டரில் முதலில் பிரண்டையை போட்டு சிறிது நேரம் அரைத்து விட்டு அதன் பின் ஊற வைத்துள்ள அரிசி,வெந்தயம் மற்றும் பருப்பு முதலியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நைசாக அரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மாவில் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மாவினை எட்டு மணி நேரம் வரை அப்படியே வைத்து புளிக்க செய்ய வேண்டும். 8 மணி நேரத்திற்கு பின் மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு தோசை மாவு பதத்திற்கு ரெடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு தோசைக்கல் வைத்து தோசைக் கல் சூடான பின் மாவினை வட்டமாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் விட்டு ஒரு பக்கம் வெந்த பிறகு, மறுபக்கம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு தோசை வார்த்து எடுத்தால் ஹெல்த்தியான பிரண்டை தோசை ரெடி!