அது என்ன டபுள் கார்டியாக் அரெஸ்ட்? இது ஏன் ஆபத்தானது? என்ன சிகிச்சை?

By Ramya s  |  First Published Sep 6, 2023, 1:12 PM IST

குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு வரலாறு அல்லது, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் மாரடைப்பால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். 


பிரேசிலைச் சேர்ந்த ஃபிட்னஸ் ஆர்வலர் லரிசா போர்ஜஸ், 33, இரட்டை மாரடைப்பால் மரணமடைந்தார், இதனால் அவரின் ஃபாலோயர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதல் மாரடைப்பால் கோமா நிலைக்கு சென்ற அவர், டர்ந்து இரண்டாவது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதயம் திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் பம்ப் செய்வதை நிறுத்தும் போது மாரடைப்பு ஏற்படுகிறது, இதன் காரணமாக மூளை மற்றும் உடலின் பிற முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் நிறுத்தப்படும். குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு வரலாறு அல்லது, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளவர்கள் மற்றும் புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் மாரடைப்பால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். 

இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதைத் தடுக்கும் சில வகையான அரித்மியாக்களால், உங்கள் இதயத் துடிப்பின் வேகம் அல்லது தாளத்தில் ஏற்படும் பிரச்சனையால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது என்று இதய நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Videos

undefined

பொதுவாக பலரும் கார்டியாக் அரெஸ்ட்  மற்றும் மாரடைப்பு ஆகிய இரண்டையும் குழப்பிக் கொள்கின்றனர். ஆனால் அவை இரண்டும் வேறுபட்டவை.திடீர் மாரடைப்பு என்பது மாரடைப்பிலிருந்து வேறுபட்டது. இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தில் உள்ள அடைப்பு அதற்கு காரணம் இல்லை. 

மறுபுறம், மாரடைப்பு இதயத்தின் மின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும், இது கார்டியாக் அரெஸ்ட்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர் கூறுகிறார்.

கார்டியாக் அரெஸ்ட்டின் அறிகுறிகள்

  • மார்பு வலி அல்லது அசௌகரியம்
  • இதயத்துடிப்பு அதிகரிப்பு
  • விவரிக்க முடியாத மூச்சுத்திணறல்
  • மயக்கம்

இரட்டை இதயத் தடுப்பு என்றால் என்ன?

இதய நோய் நிபுணர்கள் இதுகுறித்து பேசிய போது "இதயத்தின் ஏட்ரியா மற்றும் வென்ட்ரிக்கிள்கள் இரண்டும் ஒரே நேரத்தில் இதயத் தடுப்புக்கு உட்படும்போது இரட்டை இதயத் தடுப்பு ஏற்படுகிறது. அதாவது இரட்டை கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுகிறது. ஒரு பொதுவான இதயத் தடுப்பு சூழ்நிலையில், அசாதாரண இதயத் துடிப்பு ஏற்படும், ஏட்ரியா மற்றும் வென்ட்ரிக்கிள்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சேதமடையும் போது, இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும், ஏனெனில் இதயம் போதுமான அளவு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாது, மூளை உட்பட உடலின் அத்தியாவசிய உறுப்புகளான ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தை இழக்கிறது” என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இரட்டை இதயத் தடுப்புக்கு என்ன காரணம்?

இரட்டை இதயத் தடுப்பு என்பது மிகவும் அரிதான, ஆபத்தான மருத்துவ அவசரநிலை ஆகும், ஏற்கனவே இதய பிரச்சனைகள் அல்லது இதய ஆபத்து காரணிகள் உள்ளவர்களுக்கு இந்த நிலை ஏற்படலாம். இதயத் தசையில் ஏற்படும் மாரடைப்பு பாதிப்பு மற்றும் மின் கடத்தல் அமைப்பு சீர்குலைவதால் இதயத் தடுப்பு ஏற்படலாம். திடீர் இதயத் தடுப்புக்கான குடும்ப வரலாறு. புகைபிடித்தல், அதிகப்படியான மது அருந்துதல், உடல் பருமன், திடீர் மாரடைப்பு போன்றவையும் இதயத் தடுப்புக்கு வழிவகுக்கும். 

இரட்டை இதயத் தடுப்புக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் அல்லது தடுக்கலாம்?

இரட்டை இதய தடுப்பு வழக்கமான இதயத் தடுப்பை விட ஆபத்தானது, ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளித்தால் உயிரை காப்பாற்ற முடியும். இரட்டை கார்டியாக் அரெஸ்ட்டில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும். இருப்பினும், இது எப்போதும் ஆபத்தானது அல்ல. CPR போன்ற விரைவான மற்றும் திறமையான தலையீடுகள் முதலில் தொடங்கப்பட்டால் உயிர் காக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

click me!