ஆண்களைப் போல இல்லாமல் பெண்களுக்கு ஒரு வயதை தாண்டிய பிறகு பாலியல் ரீதியான ஆசைகள் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் மெனோபஸ் காலத்தை கடந்த பிறகு அவர்கள் உடலுறவில் ஈடுபடலாமா என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் திருமணமான காலகட்டத்தில் பாலியல் ரீதியான ஆசைகள் அதிக அளவில் இருக்கும். ஆனால் ஒரு குழந்தை பிறந்த பிறகு அதன் மீட்டான நாட்டமும், ஆர்வமும் தொடர்ச்சியாக குறைய துவங்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை.
ஆனால் பெண்கள் 45லிருந்து 50 வயதை கடந்த பிறகு, குறிப்பாக அவர்களுடைய மெனோபஸ் காலகட்டத்திற்கு பிறகு பெண்களிடையே பாலியல் ரீதியான ஆசைகள் எழுமா? இல்லையா? என்பது குறித்த சந்தேகம் பலர் மத்தியில் உள்ளது.
பற்களின் கறை நீங்கி வெண்மையாக ஜொலிக்க 6 சிம்பிள் சூப்பர் டிப்ஸ்..!!
சரி மெனோபஸ் என்றால் என்ன? பெண்களின் மாதவிடாய் சுழற்சி முற்றிலுமாக நிற்கும் காலத்தை தான் மருத்துவர்கள் மெனோபஸ் என்று அழைக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு பிறகு பெண்கள் உடலுறவில் ஈடுபடலாமா? அல்லது அதன் மீதான ஆர்வம் அவர்களுக்கு குறைந்து விடுமா? என்பது குறித்து மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை பார்க்கலாம்.
உடலுறவு கொள்வதற்கு வயது ஒரு தடை அல்ல என்பது தான் பொதுவான கருத்து, ஆகவே இந்த மெனோபஸ் காலகட்டத்திற்கு பிறகும் பெண்கள் தாராளமாக உடலுறவு கொள்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. ஆனால் இந்த மெனோபஸ் காலத்தை கடந்த பெண்களிடம் பாலியல் ரீதியான ஆசைகள் குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
காரணம், பெண்கள் பிறந்ததிலிருந்து அவர்களுக்கு மாதவிடாய் காலம் துவங்கி அதன் பிறகு அது முடிவடையும் வரை பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இவை சில சமயங்களில் அவர்களுக்கு பாலியல் ரீதியான ஆசைகளை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே மெனோபஸ் காலத்திற்க்கு பிறகு பாலியல் ரீதியான ஆசைகள் குறைந்தால், அவர்கள் சரியான மருத்துவர்களை அணுகி, தங்களுக்கு தேவையான அறிவுரைகளை பெற்று செயல்படலாம்.
உடலுறவுக்கு பின் பெண்கள் உடனே தூங்குவது சரியா? என்னனு தெரிஞ்சிகலாம் வாங்க..!!