அடிக்கடி உடலுறவுகொள்வது எந்த அளவிற்கு தவறோ, அதே அளவிற்கு உடலுறவுகொள்ளாமல் இருப்பதும் பெரும் தவறும் என்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி உடலுறவுகொள்ளாமலே இருப்பதால் புற்றுநோய் வர வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக உடலுறவு கொள்ளாமல் இருப்பது பல வியாதிகளை கொண்டு வருவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மன அழுத்தம், இருதயம் சம்பந்தமான நோய்கள், அதிக ரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகள், பல ஆண்டுகளாக உடலுறவு கொள்ளாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் சர்வசாதாரணமான பிரச்சனைகளாக மாறுகின்றது.
இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில் சுமார் ஒரு வருட காலம் சில நூறு ஆண்களும் பெண்களும் உடலுறவு கொள்ளாமல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதேபோல சில ஆண்களும் பெண்களும் சுமார் ஐந்து ஆண்டு காலம் உடலுறவுக்கு கொள்ளாமல் அந்த ஆய்வுக்கு உட்பட்டனர்.
உடலுறவுக்கு பின் பெண்கள் உடனே தூங்குவது சரியா? என்னனு தெரிஞ்சிகலாம் வாங்க..!!
இந்த ஆய்வின் முடிவுகள் உண்மையில் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது என்று நான் கூற வேண்டும், காரணம் ஓராண்டு உடலுறவு இல்லாமல் இருந்தவர்களை ஒப்பிடும்போது, ஐந்தாண்டுகள் உடலுறவு இல்லாமல் இருந்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம், மன அழுத்தம், கவலைகள், நினைவாற்றல் இழப்பு ஆகியவை தென்பட்டுள்ளது.
இதை விட ஒரு படி மேலே சென்று சிலருக்கு கணைய புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆய்வின் முடிவு கூறியது என்று தகவல்கள் வெளியானது. ஆண்களை பொறுத்தவரை அவர்களுடைய பாலியல் வாழ்க்கை விதைப்பை புற்றுநோயின் சாத்தியக்கூறுகளுடன் இணைக்கப்படுகிறது.
சுமார் 25000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், ஒரு மாதத்திற்கு சராசரியாக 21 முறைக்கும் மேல் உடலுறவு கொண்டவர்களிடம், போஸ்டேட் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு குறைந்தே காணப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.