ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பு கரைய..எடை குறைய.. யாரும் சொல்லாத ரகசியம்..!!

Published : Jan 05, 2024, 11:27 AM ISTUpdated : Jan 05, 2024, 11:51 AM IST
ஒரே வாரத்தில் தொப்பை கொழுப்பு கரைய..எடை குறைய.. யாரும் சொல்லாத ரகசியம்..!!

சுருக்கம்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகள் நிச்சயம் உங்கள் வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பது மட்டுமின்றி,  உடல் எடையும் குறைக்க உதவுகிறது.

தற்போது பிஸியான வாழ்க்கையில் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்தி வருகிறோம்.தவறான வாழ்க்கை முறையால் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் முழுவதும் ஒரே இடத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதால் உடல் இயக்கம் ஏற்படாது இது நமது ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.இதனால் தொப்பை அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உங்களுக்கு அதிகப்படியான தொப்பை இருந்தால், இந்த கூடுதல் கொழுப்பை குறைக்க விரும்பினால், இந்த செய்தி உங்களுக்கானது.

தொப்பை கொழுப்புக்கு என்ன காரணம்?
பொதுவாகவே, தொப்பை வருவதற்கு முக்கியக் காரணமாக, நாம் சாப்பிடும் உணவுப் பழக்கம் ஆகும். அதுமட்டுமின்றி, மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டை அதிகம் உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை கூட காரணம் என்று சொல்லலாம். ஆனால்  உண்மையில், தொப்பை கொழுப்பு என்பது மிகவும் ஆபத்தான கொழுப்பு ஆகும். இது நம் தோற்றத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், பல்வேறு விதமான நோய்கள் வளர அனுமதிக்கிறது. எனவே, இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்திய குறிப்புகள் நீங்கள் பின்பற்றுவதன் மூலம், நிச்சயமாக உங்கள் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள கெட்ட கொழுப்பையும் எளிதாக  குறைக்க முடியும்.

இவற்றை சாப்பிடுவதை நிறுத்துங்கள்:
எண்ணெய் மற்றும் சர்க்கரை வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இவற்றை நீங்கள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரே வாரத்தில் உங்கள் வயிற்று தொப்பை குறையும்.

இதையும் படிங்க:  இது என்ன ஜப்பானிய டவல் உடற்பயிற்சி..? உடல் எடையை குறைக்க இத ட்ரை பண்ணுங்க..!

இஞ்சி டீ குடியுங்கள்:
ஆயுர்வேதம் படி, இஞ்சி செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இஞ்சி டீ குடியுங்கள். அது உங்களுக்கு 
பெரிதும் உதவும். ஆனால் இஞ்சி டீயில் பால் சேர்க்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க மற்றொரு வழி என்னவென்றால், இஞ்சியை தண்ணீரில் போட்டு, 10 நிமிடம் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். விரைவில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்க சூப்பரான டிப்ஸ் இதோ..!

இந்த நீரை குடியுங்கள்:
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். ஏனெனில் இதனால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். மேலும் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்பை உடைக்க பெரிதும் உதவுகிறது. அதுபோல் இந்த நீரானது, உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைக் கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

திரிபலா பொடி:
ஆயுர்வேதத்தில், திரிபலா பொடி பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது எடை இழப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இந்த பொடியை நீங்கள் இரவில் தூங்கும் முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை விரைவில் குறையும் மற்றும்  செரிமானம் மேம்படும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்
Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!