உங்க வாயில் இந்த மாதிரி சுவையை உணர்கிறீர்களா? அப்ப இந்த ஆபத்துல இருக்கீங்கனு அர்த்தமாம்!! ஜாக்கிரதையா இருங்க!!

By Ma riya  |  First Published Jun 8, 2023, 3:55 PM IST

நம்முடைய வாயில் உணரும் சுவைகளை வைத்து நமது ஆரோக்கியத்தை சொல்லிவிடலாம். 
 


பூண்டு, வெங்காயம் போன்ற உணவுகளை சாப்பிட்ட பின்னர் நம்முடைய வாயில் வித்தியாசமான சுவையை உணருவோம். சிலருக்கு பற்களில் பிரச்சனை காரணமாக அல்லது மோசமான வாய் சுகாதாரம் காரணமாகவும் வேறு சுவை தெரியலாம். இதை தவிர்த்து நம்முடைய வாயில் வித்தியாசமான சுவையை உணர்வது நோயின் அறிகுறியாகும். நமக்கு வெவ்வேறு நோய்கள் ஏற்படுவது வித்தியாசனமான சுவையை வாயில் உணர காரணமாக இருக்கும். 

கசப்பு சுவையை உணருதல்: 

Latest Videos

undefined

உங்களுடைய வாயில் கசப்பு சுவை உணர்வது உடல்நலப் பிரச்சனையை குறிக்கலாம். உங்களுடைய கல்லீரல் அல்லது பித்தப்பை போன்ற உள்ளுறுப்புகளில் பிரச்சனை இருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம். இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் இருந்தாலும் கசப்பு சுவையை உணருவீர்கள். இதனால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, சோர்வு ஆகிய நோய் அறிகுறிகளும் வெளிப்படும். இது தவிர ஹார்மோன் சமநிலையின்மை, வாய் சுகாதாரம் பராமரிக்காமல் விடுவது, அதிக மருந்து பயன்பாடு, மன அழுத்தம் ஆகிய காரணங்களால் கூட சிலருக்கு வாயில் கசப்பு சுவை உணர முடியும். 

உலோக சுவையை உணருதல்: 

உங்களுடைய வாயில் உலோகச் சுவையை உணர்ந்தால் வாய் வறட்சி, பசியின்மை கோளாறு ஆகியவை காரணங்களாக இருக்கலாம். இது தவிர ஈறு நோய், நீரிழிவு ஆகிய நோய்கள், சிறுநீரக நோய், கல்லீரல் நோய் போன்ற உள்ளுறுப்பு நோய்களும் காரணமாக இருக்கலாம். செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்றவையும் காரணமாக இருக்கலாம். 

இனிப்பு சுவையை உணருதல்: 

சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யும்போது அதிகளவு குளுக்கோஸ் வாயில் இனிப்பு சுவையை உண்டாக்கும். இந்த சுவையுடன் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளும் காணப்படும். 

இதையும் படிங்க: தொப்புளில் ஒரு துளி எண்ணெய் வைத்தால் இவ்வளவு நன்மைகளா??

புளிப்பு சுவையை உணருதல்: 

உங்களுடைய வயிற்று அமிலம் உணவுக்குழாய்க்கு திரும்பும் நேரத்தில், உங்களுடைய வாயில் ஒருவகையான புளிப்பு, விரும்பத்தகாத சுவையை உண்டாகும். இரைப்பை உணவுக்குழாய் அல்லது ரிஃப்ளக்ஸ் நோய் காரணமாக நிகழ்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு, நரம்பு கோளாறுகள் ஆகிய மற்ற உடல்நலப் பிரச்சனைகளும் புளிப்புச் சுவைக்கு காரணம்.

உப்பு சுவையை உணருதல்: 

உடலில் நீரிழப்பு பிரச்சினை இருக்கும்பட்சத்தில் உடலில் குறைந்த உமிழ்நீர் தான் உற்பத்தியாகும். வறண்ட வாய், தாகம், சோர்வு, தசை பலவீனம் ஆகியவை உப்பு சுவையை உணரும் போது ஏற்படலாம். 

இதையும் படிங்க: உங்களுக்கு பயங்கரமான கனவுகள் ஏன் வருது தெரியுமா? இந்த சம்பவம் உங்களுக்கு நடந்திருக்கலாம்!!

click me!