டால்கம் பவுடரால் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படலாம்.. WHO-ன் புற்றுநோய் நிறுவனம் எச்சரிக்கை..

By Ramya sFirst Published Jul 6, 2024, 10:17 AM IST
Highlights

உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் நிறுவனம், டால்கம் பவுடரை புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாக வகைப்படுத்தியுள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் (WHO) புற்றுநோய் நிறுவனம், டால்கம் பவுடரை புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாக வகைப்படுத்தியுள்ளது. டால்கம் பவுடர் பயன்பாட்டிற்கும் கருப்பை புற்றுநோய்க்கும் இடையே தொடர்பு இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IARC) சமீபத்தில் நடத்திய ஆய்வில் டால்கம் பவுடர், மனிதர்களுக்கு கருப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதற்கு போதுமான சான்றுகள் இருப்பதாகவும், எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. மேலும்  "இது மனித உயிரணுக்களில் புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்றும் கூறப்பட்டிருந்தது. 

Latest Videos

பிறப்புறுப்புகளில் டால்கம் பவுடரை பயன்படுத்தும் பெண்களில் கருப்பை புற்றுநோயின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதையும் புற்றுநோய் நிறுவனம் ஒப்புக்கொண்டது. பெரும்பாலான மக்கள் பேபி பவுடர் அல்லது அழகுசாதனப் பொருட்கள் வடிவில் டால்கம் பவுடரை பயன்படுத்தி வருகின்றனர் என்றும் IARC தெரிவித்துள்ளது. 

எப்போதும் டீ குடிச்சுட்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்ப இதைத் தெரிஞ்சுகோங்க!

டால்க் என்பது இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கனிமமாகும், இது உலகின் பல பகுதிகளில் தோண்டப்பட்டு, டால்கம் பேபி பவுடர் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆனால் டால்க் வெட்டப்படும்போது, ​​பதப்படுத்தப்படும்போது அல்லது தயாரிப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்போது அதன் மிக முக்கியமான வெளிப்பாடு ஏற்படுகிறது.

டால்கம் பவுடர் பயன்பாட்டிற்கும் கருப்பை புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு? 

மே 15 அன்று ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜியில் வெளியிடப்பட்ட சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, பிறப்புறுப்புகளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவது கருப்பை புற்றுநோயுடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது, இது முட்டைகளை (கருப்பைகள்) உற்பத்தி செய்யும் பெண் உறுப்புகளில் தொடங்குகிறது. அடிக்கடி அதிக பவுடரை  பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே 15 அன்று கிளினிக்கல் ஆன்காலஜி என்ற இதழில் வெளியிடப்பட்ட சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, பிறப்புறுப்புகளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதால் கருப்பை புற்றுநோய் ஏற்படலாம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. குறிப்பாக அதிக நேரம் அல்லது அதிக அளவு டால்கம் பவுடரை பயன்படுத்துபவர்களுக்கு ஆபத்து அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சும்மா சொல்லல 'ஆப்பிள்' சப்பிட்டும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் பெரிய ஆபத்து இருக்கு!! 

கருப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பதே இடுப்பு மற்றும் வயிற்றுக்கு முன்னேறும் வரை பெரும்பாலும் கண்டறியப்படாமல் போகும். இந்த கட்டத்தில், கருப்பை புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். மேலும் அது ஆபத்தானதும் கூட. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள் தோல் பராமரிப்பு பொருட்கள் மற்றும் பெண் ஹார்மோன் தொடர்பான புற்றுநோய்களுக்கு இடையேயான தொடர்பை ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!