நாவூறும் சுவையில் மாங்காய் சாம்பார்.. ரெசிபி இதோ..!

By Kalai Selvi  |  First Published Jul 5, 2024, 2:20 PM IST

Raw Mango Sambar Recipe  : இந்த கட்டுரையில் மிகவும் சுவையான மாங்காய் சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.


சாம்பார் என்றாலே பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். சாம்பாரில் பல வகைகள் உள்ளன. அதாவது, வெங்காய சாம்பார், முருங்கைக்காய் சாம்பார் போன்றவை ஆகும்.  அந்த வகையில், இன்று உங்களது வீட்டில் மதியம் சாதத்திற்கு சாம்பார் செய்ய போகிறீர்கள் என்றால் ஒரு முறை மாங்காய் சாம்பார் செய்து சாப்பிடுங்கள் இந்த சாம்பார் சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், மிகவும் சுவையான மாங்காய் சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:   மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார்.. இனி வீட்டிலும் செய்யலாம்... ரெசிபி இதோ!

Latest Videos

undefined

மாங்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1
துவரம் பருப்பு - 3/4 கப்
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்
புளி  - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடுகு - 1 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  பருப்பு இல்லாமல் மணக்க மணக்க இட்லி சாம்பார் இப்படி செய்ங்க.. சுவை வேற லெவல்ல இருக்கும்!

செய்முறை:
மாங்காய் சாம்பார் செய்ய முதலில் எடுத்து வைத்த மாங்காவே நன்றாக கழுவி அதை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பிறகு, துவரம் பருப்பையும் நன்றாக கழுவி அதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனுடன், ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயும் சேர்த்து, பின் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 4 விசில் வைத்து இறக்கவும். குக்கரில் விசில் போன பிறகு குக்கர் மூடியை திறந்து பருப்பை நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனை அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் வெந்தயம், உளுந்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும். பிறகு அதில் சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் மசித்து வைத்துள்ள பருப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, மாங்காய் துண்டு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். பின் அதில் 3/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். மாங்காய் நன்றாக வெந்ததும் அதில் கரைத்து வைத்த புளிசாற்றையும் ஊற்றி மூன்று நிமிடம் கொதிக்க விடுங்கள்.

மறுபுறம், அடுப்பில் ஒரு சின்ன வாணலியை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கருவேப்பிலை, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் அதனை அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் சாம்பாரில் ஊற்றுங்கள். இறுதியாக பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லியை தூவ வேண்டும். அவ்வளவுதான் ருசியான மாங்காய் சாம்பார் தயார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

click me!