பன்னீரில் இப்படி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்.. ரெசிபி இதோ!

By Kalai Selvi  |  First Published Jul 4, 2024, 2:21 PM IST

Paneer Biryani Recipe : வித்தியாசமான சுவையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் பிரியாணி எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.


பிரியாணி பலரது விருப்பமான உணவு. பிரியாணியில் பல வகையான விரட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் அதிக விரும்பி சாப்பிடுவது சிக்கன் பிரியாணி தான். ஆனால், நீங்கள் இப்படி ஒரு பிரியாணியை சாப்பிட்டு இருக்கவே மாட்டீர்கள். அதுதான் பன்னீர் பிரியாணி. இந்த பிரியாணி சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுபவர்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் பன்னீர் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  சிக்கன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் 'காடை பிரியாணி' .. சூப்பரான டேஸ்ட்... ரெசிபி இதோ!

Tap to resize

Latest Videos

பன்னீர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
பன்னீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 5
இஞ்சி - 2 துண்டு
பூண்டு - 4
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
மல்லி தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1ஸ்பூன்
கிராம்பு - 3
பட்டை - 1 
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 2
மிளகு - 1 ஸ்பூன்
புதினா இலை - சிறிதளவு
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

இதையும் படிங்க: செம்ம சுவையான தேங்காய் பால் பட்டாணி பிரியாணி.. ரெசிபி இதோ!

செய்முறை:

  • பன்னீர் பிரியாணி செய்ய முதலில் எடுத்து வைத்த பாஸ்மதி அரிசி நன்கு கழுவி அதில் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் கிராம்பு, ஏலக்காய், மிளகு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடியாக அரிது அதையும் ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பிறகு அதே மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும். பிறகு அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து அவற்றின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  • பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளுங்கள். தக்காளி நன்கு வதங்கியதும் அதில் பிரியாணி இலை, மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்த மசாலா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். 
  • பிறகு அதில் புதினா இலைகள், கழுவி வைத்த பாஸ்மதி அரிசி, சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு அதில் மூன்று கப் தண்ணீரையும் சேர்த்து கிளறி விடுங்கள்.
  • பின் அதில் எடுத்து வைத்த பன்னீர் துண்டுகளையும் அதில் சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு ஒரு முறை கிளறி விடுங்கள். 
  • இப்போது குக்கரை மூடி 3 விசில் வைத்து இறக்கவும் விசில் போனதும் குக்கரின் மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடுங்கள். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் தண்ணீர் பிரியாணி ரெடி.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

click me!