Pudina Kothamalli Dosa : சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமான புதினா கொத்தமல்லி தோசை எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே பெரும்பாலானோர் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இட்லி தோசை தான் இருக்கும். அதுவும், தோசை என்றால் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். தோசை சாப்பிடுவதற்கு சுவையாகவும் செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும் மேலும் தோசையில் பல வகைகள் ஒன்று அந்த வகையில் இந்த பதிவில், புதினா கொத்தமல்லி தோசை எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.
இன்று காலை உங்கள் வீட்டில் செய் தோசை செய்யப்போகிறீர்கள் என்றால் ஒரு முறை இந்த புதினா கொத்தமல்லி தோசை செய்யுங்கள். முக்கியமாக இதுவரை இந்த தோசையை நீங்கள் சாப்பிடவில்லை என்றால் கண்டிப்பாக செய்து சாப்பிடுங்கள். இந்த புதினா கொத்தமல்லி தோசை சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் புதினா கொத்தமல்லி தோசை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: காலை டிபனுக்கு சத்தான இந்த மாதிரி தோசை செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க! ரெசிபி இதோ..
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 2 கப்
கொத்தமல்லி இலை - 3/4 கப்
புதினா - ஒரு கைப்பிடி
கருவேப்பிலை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 5
புளி - சின்னது
உப்பு - சுவைக்கு ஏற்ப
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: 10 நிமிடத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த சத்தான மொறு மொறு தோசை.. ஒருமுறை செய்ங்க அடிக்கடி கேட்பாங்க..
செய்முறை:
புதினா கொத்தமல்லி தோசை செய்ய முதலில், எடுத்து வைத்த புதினா கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பிறகு இஞ்சியை தோல் நீக்கி அதையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடையை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு, புளி, கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
அவை நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து கீழே இறக்கி ஆற வைக்கவும். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்டை எடுத்து வைத்த தோசை மாவில் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது தோசை சுடுவதற்கான மாவு தயார்.
இதனை அடுத்து ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், நல்லெண்ணெய் தடவி, கலைக்கி வைத்த மாவை தோசையாக ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியமான புதினா கொத்தமல்லி தோசை ரெடி.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.