சும்மா சொல்லல 'ஆப்பிள்' சப்பிட்டும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் பெரிய ஆபத்து இருக்கு!! 

Foods To Avoid After Eating Apple : ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது என்ன மாதிரியான உணவுகள் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

which foods you should avoid after eating apple in tamil mks

ஆப்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை வழங்கும் என்று நமக்கு தெரிந்ததே. ஆப்பிளின் சுவையை போலவே அதில் நன்மைகளும் ஏராளம். உங்களுக்கு தெரியுமா? ஆப்பிளில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், வைட்டமின் சி, பி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன. இது நம்முடைய உடலுக்கு தேவையான  ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் உடல் வலிமையாகிறது. 

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் போதும். நமக்கு மருத்துவரே தேவையில்லை. ஆனால் நினைவிருக்கட்டும். ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் தான். ஆப்பிளின் தன்மை குளிர்ச்சியை ஏற்படுத்துவது. ஆகவே ஆயுர்வேதம் அதனை காலையில் உண்ணக் கூடாது என்கிறது. ஆப்பிள் பழத்தின் குளிர்ச்சி நம்முடைய உடலில் கபத்தை அதிகரிக்கும். நீங்கள் ஆப்பிள் சாப்பிட்டால் ஆப்பிளுடன் அல்லது அதன் பின்னர் எடுத்து கொள்ளும் உணவுகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அது என்ன மாதிரியான உணவுகள் என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

 1. தண்ணீர் குடிக்காதீங்க! 

ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் உடனடியாக தண்ணீர் அருந்தினால், அதனால் வயிற்றினுள்  pH அளவு பாதிக்கும். இதனால் செரிமானக் கோளாறு, குடலில் வீக்கம், அஜீரணம் ஆகியவை ஏற்படலாம். உங்களுடைய பளபளப்பான சருமத்தில் சுருக்கங்கள்  வரக்கூடும். இதனால் வயதான தோற்றம் உண்டாகும். 

 2. முள்ளங்கி தவிர்க்கவும்

ஆப்பிள் மற்றும் முள்ளங்கியை ஒரே நாளில் உண்பது நல்லதல்ல. ஆப்பிள் சாப்பிட்ட பின்னர் முள்ளங்கி உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் முள்ளங்கியும் குளிர்ச்சி தரும் தன்மையுடையது. ஆப்பிள் அல்லது முள்ளங்கியை ஒரே நேரத்தில் உண்ணும்போது உடலில் இருக்கும் சளி அதிகமாகிறது. செரிமான கோளாறு ஏற்படும்  சிலருக்கு தோல் வெடிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

3. தயிர் சாப்பிடாதீர்கள்! 

முள்ளங்கி மாதிரியே தயிரிலும் குளிர்ச்சித் தன்மை தான் இருக்கிறது.  இதனை ஒரே நேரத்தில் உண்பதால் உடலில் சளி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. 

எந்த கனியை ஆப்பிள் உண்ணும் போது சாப்பிடக் கூடாது? 

ஆப்பிள் உண்ணும்போது நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு ஆகிய கனிகளை உண்ண வேண்டாம். இது வயிற்றில் இருக்கும் சிட்ரிக் அமிலத்தை அதிகமாக்கும். இதனால் வயிற்றினுள்  pH அளவு அதிகரிக்கிறது. இது வயிறு அல்லது மார்பில் எரியும் உணர்வை உண்டாக்கும். இது தவிர மலச்சிக்கல், அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்று உப்புசம் ஆகிய போன்ற பிரச்சனைகளை கொண்டு வரும். 

ஆப்பிளுடன் ஊறுகாய் சாப்பிட்டால் என்னாகும்? 

புளிப்பு சுவை கொண்ட பழங்களைப் போலவே, ஊறுகாயும் ஆப்பிளுக்கு ஒத்துவராத உணவு. ஆப்பிளை உட்கொண்ட பின் ஊறுகாயையும் சாப்பிடுவதால், வயிற்றினுள் அமில, கார சமநிலை பாதிக்கும். சிட்ரிக் அமில அளவும் அதிகமாகும். இதன் காரணமாக, வயிறு தொடர்பான பிரச்சனைகள் தலைதூக்கும். 

உடலின் நன்மைக்காக ஆப்பிள் பழத்தை உண்ண விரும்புபவர்கள் அதன் பலன்கள் முழுமையாக கிடைக்க மேற்சொன்ன விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். அதன் படி பின்பற்றுவது தான் ஆப்பிளின் நன்மைகளை உங்களுக்கு முழுமையாக பெற்று தரும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios